கரும்பு வயலுக்கு தெளித்த களைக்கொல்லி மருந்தினால் 92 பள்ளி குழந்தைகள் பாதிப்பு…!!

Read Time:2 Minute, 11 Second

201605201655310388_92-Children-Believed-to-Be-Poisoned-by-Monsanto-Weed-Killer_SECVPFபெரு நாட்டில் வடபகுதியில் நெபேனா நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான கரும்பு வயல்களில் களைக்கொல்லி மருந்து விமானம் மூலம் தெளிக்கப்பட்டது.

அதன் அருகில் ஒரு பள்ளி உள்ளது. அங்கு ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர். மருந்து தெளிக்கும்போது பள்ளியில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவில்லை.

எனவே, அந்த மருந்தின் விஷத்தன்மை கலந்த காற்றைச் சுவாசித்த பள்ளிக் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் வாந்தி – மயக்கம் ஏற்பட்டது. சிலருக்கு வயிறு மற்றும் தலைவலி, கண் எரிச்சலும் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. களைக் கொல்லி மருந்து தெளிக்க அந்த நிறுவனம் நெபேனா நகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என்றும், இந்த மருந்து புற்று நோயை உருவாக்கும் என்பதால் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்கு குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், இந்த வகை மருந்துகளை தெளித்தால் 12 மணி நேரத்திற்கு அந்த வயல்களுக்கு யாரும் செல்லக்கூடாது என சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை பரிந்துரை செய்துள்ளது. ஆனால், பள்ளிக்கு மிக அருகாமையில் மருந்து தெளித்தபோதும், பள்ளிக்குழந்தைகளை வெளியேற்றாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 66 பயணிகளுடன் மாயமான எகிப்து விமானத்தின் பாகங்கள் மீட்பு – நாசவேலை காரணமா?
Next post காஷ்மீருக்கு பூகம்ப ஆபத்து: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!