மின்சாரம் செயலிழப்பு குறித்து முறைப்பாடு செய்ய புதிய இலக்கம்..!!
Read Time:1 Minute, 1 Second
மின்சாரம் செயலிழப்பு மற்றும் மின் அனர்த்தங்களின் போது முறைப்பாடு செய்வதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.
அதன்படி, ஏற்கனவே இருந்த 1987 மற்றும் 1901 என்ற எண்களுக்கு மேலதிகமாக 011 – 30 30 303 என்ற இலக்கத்திற்கும் மின்சாரம் செயலிழப்பு மற்றும் மின் அனர்த்தங்கள் பற்றி தகவல் வழங்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.
தெஹியோவிட்ட, ருவன்வெல்ல பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக சென்றிருந்த போது அவர் இவ்வாறு கூறினார்.
Average Rating