புத்தரின் போதனைகள் இன்றைய சமூகப் பிரிவினைக்கு சிறந்த மாமருந்தாகும்: பான் கி மூன்…!!

Read Time:3 Minute, 58 Second

201605211330347244_Buddhism-can-help-nations-tackle-pressing-challenges-Ban-Ki_SECVPFஉலகம் முழுவதும் இன்று புத்தரின் பிறந்தநாள் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும்நிலையில், புத்தரின் போதனைகள் இன்றைய சமூகப் பிரிவினைக்கு சிறந்த மாமருந்தாகும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.

புத்த மதத்தை நிறுவிய கவுதம புத்தர் மே மாதத்தின் பவுர்ணமி தினத்தன்று பிறந்ததாக நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள பலகோடி புத்த மதத்தினர் ஆண்டுதோறும் மே மாதத்தின் பவுர்ணமி தினத்தை புத்த பூர்ணிமா தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வகையில், இன்று புத்தரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளின் சார்பில் இன்று புத்த பூர்ணிமா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வெளியிட்டுள்ள செய்தியில், புத்தரின் போதனைகள் இன்றைய சமூகப் பிரிவினைக்கு சிறந்த மருந்தாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘எனது தாயார் புத்த மதத்தை சேர்ந்தவர் என்பதால் புத்தரின் போதனைகள் எனக்கு அறிவைக் கொடுத்த மிகப்பெரிய களஞ்சியமாக இருந்துள்ளது.

வன்முறைசார்ந்த மோதல்கள், கொடூரமான மனித உரிமை மீறல்கள், மதங்களுக்கு எதிராகவும், மக்களை பிளவுப்படுத்தவும் நடத்தப்படும் சகிப்புத்தன்மையற்ற செயல்கள் ஆகியவை பெருகிக்கொண்டே வருகின்றன. இந்த சவால்களை எல்லாம் எதிர்கொள்ள புத்தரின் போதனைகள் சர்வதேச சமுதாயத்துக்கு எவ்வளவு உதவிகரமான மாமருந்தாக இருந்துள்ளது என்பதை இதுபோன்ற புனிதமான புத்த பூர்ணிமா விழாக்களை நடத்துவதன் மூலம் உலக மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வைக்க வேண்டும்.

அனைத்து உயிரினங்களுக்குமான அன்பு, சமதர்மம் என்னும் நீதியை போதிக்கும் புத்த மதம் இன்றைய உலகின் உண்மையான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சிறந்த தீர்வை கூறுகின்றது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை புத்தம் வலியுறுத்துகிறது. வறுமை, நோய், பருவநிலை மாற்றம், பேரழிவு போன்ற பிரச்சனைகளை உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

வேற்றுமைகளை களைந்து, நட்புணர்வை பலப்படுத்தி, அனைவருக்கும் பொதுவான ஓர் எதிர்காலம் உருவாகும் வகையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும், அவற்றில் வாழும் மக்களும் தொண்டாற்ற வேண்டும் என இந்த புத்த பூர்ணிமா தினத்தில் சபதமேற்போம்’ என பான் கி மூன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் மழை, வெள்ளத்துக்கு 8 பேர் பலி…!!
Next post சொத்து தகராறில் தம்பியை வெட்டிக்கொன்ற தனியார் பஸ் டிரைவர்…!!