உக்ரைன் விமான விபத்து: ரூ.1,440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு..!!

Read Time:1 Minute, 53 Second

201605221344038327_MH17-victims-families-sue-Vladimir-Putin-and-Russia-over_SECVPFஉக்ரைன் விமான விபத்தில் பலியான 298 பேருக்கும் ரூ.1.440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உக்ரைன் விமான விபத்தில் பலியான 298 பேருக்கும் ரூ.1.440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி மலேசிய விமானம் உக்ரைனில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த சிப்பந்திகள் மற்றும் பயணிகள் என மொத்தம் 298 பேர் பலியாகினர்.

அந்த விமானம் ரஷியாவின் ‘பக்‘ ஏவுகணை என தெரிய வந்தது. ரஷியாவின் ஆதரவாளர்களான உக்ரைன் கிளர்ச்சியாளர்கள். அந்த ஏவுகணையை பயன்படுத்தி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே விமான விபத்தில் பலியான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவைச் சேர்ந்த 33 பேரின் குடும்பத்தினர் ஐரோப்பிய மனித உரிமைகள் கோர்ட்டில் ரஷியா மீதும், அதன் அதிபர் விளாடிமிர் புதின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதில், விமான விபத்தில் பலியான மேற்கண்ட 33 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.47 கோடி வீதம் ரூ.1440 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டுமா?
Next post சீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை…!!