முழு இலங்கையையும் புரட்டிப்போட்ட வெள்ள அனர்த்தம்..!!

Read Time:4 Minute, 20 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90தென்னாசியாவின் சுவர்க்கமாக,உலக சுற்றுலாத்தலங்களில் முக்கிய வகிபங்கமாக இருக்கும் இலங்கை. கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட அசாதாரண வானிலை காரணமாக நிலை குலைந்து, சின்னாபின்னமாகி போயுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை என்றும் இல்லாத வகையில் மாற்றப்பட்டு இருக்கின்றன.

வழமையாகவே இந்த மே மாதம் இலங்கைக்கு மழை கிடைக்கும் மாதமாக பலரால் வரலாற்று அனுபவத்தை கொண்டு அறியப்பட்ட விடயமாக இருக்கின்றது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிலவும் கடுமையான வெப்ப உஷ்ணத்தை குறைக்கின்ற வகையில் மே மாத மழை வீழ்ச்சியானது அமைந்து விடுவதே வழக்கம்.

ஆனால் இந்த முறை ஏற்பட்ட மழை வீழ்ச்சியானது கடுமையான வெப்ப காலத்தையே தொடர்ந்தும் விரும்பும் வகையில் மக்களின் மனநிலையினை மாற்றிவிட்டது தான் உண்மை.

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பிக் கொண்டு வரும் வேளையில் இந்த அனர்த்தம் அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக சீர்குலைத்துச் சென்று விட்டது.

தொடர்ந்து இவ்வாறான பாதிப்புக்களால் அவதியுறும் வடக்கு மக்களின் வாழ்வு எவ்வாறு நிரந்தர இடத்தை தக்கவைக்கும் என்பது கேள்விக்குறியே?

நாட்டின் தலை நகராக விளங்கும் கொழும்பு மாநகர் வரலாற்றில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெள்ள அனர்த்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். வளர்முக நாடான இலங்கையின் ஒட்டுமொத்த அபிவிருத்தியும் கொழும்பில் இருந்து ஆரம்பித்தே நீளுகின்றன. அந்த அபிவிருத்திகளுக்கு சவால் விடும் வகையில் வெள்ள அனர்த்தம் இன்று கொழும்பினை சிறைப்படுத்தியிருக்கின்றது.

மலைநாட்டு மக்களின் வாழ்வு ஆரம்பகாலம் தொட்டே இயற்கை அனர்த்தத்தோடு சமர் புரியும் களமுனையாகவே இருக்கின்றது.

இன்றும் அதற்கு மலைநாட்டு மக்கள் விதிவிலக்காகி விடவில்லை என்பதை அரநாயக்க மண்சரிவு உறுதிபடுத்திச் சென்றுள்ளது.

சென்றமுறை மீரியபெத்தையில் உத்தர தாண்டவமாடிய மண்சரிவு அனர்த்தம் மீண்டும் தன் உக்கிரத்தை காட்டி அந்த மக்களை தொடர் பீதிக்குள்ளாக்கி சென்றுள்ளது.

கிழக்கிலங்கையையும் விட்டு வைக்கவில்லை இந்த மழையின் உக்கிர பார்வை, குளங்களாலும், வாவிகளாலும் சூழப்பட்ட கிழக்கிலங்கையையும் சின்னாபின்னமாக்கி சென்று விட்டது இந்த கொடிய மழை.

இந்த மழை இலங்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாத்திரம் பாதிப்புக்குள்ளாக்காமல் முழு நாட்டையுமே சீர்குலைத்து போய்விட்டது.

இந்த கடும் மழைகாரணமாக பல உயிர்களை இழந்து விட்டோம். அதுமட்டுமல்ல பல சொத்துக்களை,ஆவணங்களை இப்படி பலவற்றை இழந்து விட்ட மக்கள் வறட்சியான கொடிய வெப்பத்தினால் கூட இப்படியான இழப்புக்களை தாம் சந்திக்கவில்லை என மழையை பகைத்துக் கொண்டு உதவிகளுக்கு ஏங்கியவாறு காலத்தை போக்குகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை…!!
Next post உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் 04 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்த முதியவர் மீட்பு..!!