கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 267 ஆசிரியர்கள் தெரிவு..!!

Read Time:3 Minute, 49 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 2016, 2017 கல்வியாண்டில் பயிற்சி பெறுவதற்காக 267 ஆசிரியர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆரம்பக் கல்விக்கு 148 பேரும், கிறிஸ்தவ சமயத்திற்கு 46 , சங்கீதத்திற்கு 33 , உடற்கல்விக்கு 32 , வர்த்தகத்திற்கு 07 , விசேடகல்விக்கு ஒருவரும் என பயிற்சி பெறுவதற்குத் தகுதிபெற்றுள்ளார்கள்.

தற்போது கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 12 ஆசிரியர்கள் பயிற்சிபெற்று வருகின்றார்கள்.

அவர்களில் 10 பேர் ஆங்கில பாடநெறியையும் ஒருவர் சங்கீத பாடநெறியையும் மற்றைய ஒருவர் உடற்கல்விப் பாடநெறியையும் பயின்று வருகின்றனர்.

2016,2017 கல்வியாண்டில் ஆசிரிய பயிற்சிக்காகப் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் 267 பேருக்கும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விரைவில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடந்த கல்வியாண்டில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 648 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற ஆசிரிய கலாசாலை இறுதியாண்டுப் பரீட்சைக்குத் தோற்றி கற்பித்தல் செயற்பாட்டுக்காக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் இவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் யூலை மாதமளவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பெருமளவான ஆசிரிய, மாணவர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டுப் பயிற்சியளிக்கப்படுகின்றபோதிலும் அங்கு ஆசிரிய மாணவர்கள் தங்கி நின்று பயிற்சி பெறுவதற்குரிய விடுதி வசதிகள் ஒழுங்கு முறையில் இல்லை.

இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட பெருமளவான பயிலுநர்கள் கலாசாலைக்கு வெளியில் தாங்களாகவே பெருமளவு பணத்திற்காக அறைகள், வீடுகளை எடுத்துத் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மற்றும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் காணப்படும் பெருமளவான வகுப்பறைகள் பழைய கட்டிடங்களாகவும் இடிந்து விழும் அபாயத்துடனும் காணப்படுகின்றன.

இக்கலாசாலையில் பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன.

வடபகுதியில் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக கோப்பாய் ஆசிரிய கலாசாலை, பலாலி ஆசிரிய கலாசாலை ஆகிய இரண்டு ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் காணப்பட்டன.

இவற்றில் பலாலி ஆசிரிய கலாசாலை இயங்காத நிலையில் மூடப்பட்டுள்ளது.

தற்போது கோப்பாய் ஆசிரிய கலாசாலை மட்டுமே ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக இயங்கு நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுத்தையின் தாக்குதலில் 6 பெண்கள் படுகாயம்…!!
Next post பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!