பட்டதாரி + பட்டயதாரி ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு 1 பவுன் இலவச தங்கம்.. ஜெ. அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 38 Second

timthumb (1)முதல்வர் ஜெயலலிதா இன்று ஆட்சிப் பொறுப்புக்கு மீண்டும் வந்ததும் முதலில் போட்ட கையெழுத்துக்களில் ஒன்று திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 1 பவுன் தங்கம் தரும் திட்டம் ஒன்றாகும்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அதில், திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் 10-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாயுடன் 4 கிராம் தங்கம், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50,000 ரூபாய் உடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல்வர் பிறப்பித்த முதல் உத்தரவில் இதுதொடர்பான அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இன்னொரு முக்கியமான உறுதிமொழியையும் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலவாக்கலை முச்சக்கரவண்டி விபத்தில் நால்வர் படுகாயம்..!!
Next post காதலுக்கு உதவிய தோழி தற்கொலை.!!