அரநாயக்கவில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்படும்…!!

Read Time:2 Minute, 12 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90மாவனல்ல அரநாயக்க பாரிய மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் நிறுத்தப்படும் என மீட்புப் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகளை இன்னும் இரண்டு நாட்களில் நிறுத்திவிட தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கோரிக்கைக்கு அமைய மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்காக அந்த இடத்திலேயே இறுதிக் கிரியைகள் மற்றும் மத வழிபாடுகள் மேற்கொள்ளப்படும்.

அரநாயக்கவில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் 23 பேரின் சடலங்களும், 20 பேரின் உடற் பாகங்களும் நேற்று மாலை வரையில் மீட்கப்பட்டுள்ளன.

பிரதேசத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் இடைக்கிடை ஏற்படும் மழையினால் படையினரால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

தடைகளை பொருட்படுத்தாது 150 படைவீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணாமல் போன அனைவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் வரையில் மீட்புப் பணிகள் தொடரும் என அண்மையில் பாதுகாப்புச் செயலாளா கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனர்த்தம் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம்…!!
Next post ஜனாதிபதி நாளை ஜப்பானுக்கு விஜயம்…!!