கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம்…!!

Read Time:1 Minute, 57 Second

images (2)கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது என தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு மற்றும் ஆய்வுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

நாட்டின் 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கண்டி, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் கடமையாற்றி வரும் நிறுவனத்தின் அதிகாரிகள் கேகாலைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும், அவர்கள் மண்சரிவு அபாயம் குறித்து ஆய்வு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குருணாகல், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆபத்து நிலைமைகளின் அடிப்படையில் ஆபத்து கூடிய ஆபத்து குறைந்த என இரண்டு வலயங்களாக இந்தப் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு வார காலப்பகுதியில் 400 மண் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு பிரிவு பணிப்பாளர் ஆர்.எம்.என். பண்டார கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கேகாலை, அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய, தெரணியகல, யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிகளவு அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி நாளை ஜப்பானுக்கு விஜயம்…!!
Next post தற்கொலைக்கு முயன்ற இளைஞனை முத்தம் கொடுத்து காப்பாத்திய பெண்! வீடியோ இணைப்பு…!!