By 24 May 2016 0 Comments

யாழில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது…!!

downloadயாழ்ப்பாணம் கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை பகுதியில் வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது.

அண்மையில் கைது செய்யப்பட்ட ரொக் குழுவுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள்களும் , கையடக்க தொலைபேசிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலைகள் இரண்டில் கல்வி கற்பதாகவும் இவர்கள் எதிர்வரும் ஆண்டு பரீட்சைக்கு தோற்ற இருப்பவர்கள் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது



Post a Comment

Protected by WP Anti Spam