நடிகர் சங்க தேர்தல்: சரத் அணிக்கு வெற்றி

Read Time:1 Minute, 51 Second

Sarath-11.jpgதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. சிறு சிறு சலசலப்புகள் தவிர பெரிய அளவில் பிரச்சினை ஏதுமின்றி தேர்தல் நடந்து முடிந்தது. அதன் பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தலைவர் பதவிக்கு சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார். மற்ற பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

துணைத்தலைவர்களாக மனோரமாவும் (1084), விஜயகுமாரும் (958) தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.செயலாளர் பதவியில் மன்சூர் (235) மண்ணை கவ்வ மெஜாரிட்டி ஓட்டுகளுடன் ராதாரவி (992) வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்குதான் கடும் போட்டி. சரத்குமார் அணியின் கே.என். காளை 720 ஓட்டுகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட நல்லதம்பி 552 ஓட்டுகளும் பெற்றனர்.

சரத்குமார் சங்க தலைவராக போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஓட்டுப்பதிவு நடக்கும்போதே பொன்னாடைகளும், பூச்செண்டுகளும் அவரைத்தேடி வந்து கொண்டேயிருந்தன. அதில் முக்கியமான பூச்செண்டு விஜயகாந்தினுடையது. பொன்னாடை, திருநாவுக்கரசருடையது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 5.5 ரிக்டர் பதிவானது: தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் 1000 வீடுகள் தரைமட்டம்
Next post வான் வழித் தாக்குதல்களை 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது