மூதாட்டியை திருமணம் செய்ய சதித் திட்டம் தீட்டிய வாலிபர்…!!
சுவிட்சர்லாந்தில் நீதிமன்றம் விதித்த உத்தரவின் பேரில் 21 வயது வாலிபனை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என 71 வயது மூதாட்டி தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த 71 வயது மூதாட்டிக்கும், துனிசியா நாட்டை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் பேஸ்புக்கின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக்கின் மூலம் தங்கள் நட்புறவை வளர்த்துக்கொண்ட இவர்களுக்கு, நாளடைவில் ஒருவரையொருவர் மிகவும் பிடித்துவிட்டது.
இவர்கள் இருவரது ரசனைகள் மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் ஒன்றாக இருந்த காரணத்தால் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர், இந்த மூதாட்டி கல்வித்துறை செயலலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துனிசியா நாட்டிற்கு சென்ற அந்த மூதாட்டி அந்த வாலிபரை சந்தித்து பேசியுள்ளார், இந்நிலையில் இவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கையில், பதிவு அலுவலகம் இவர்களது திருமணத்தை மறுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இது குறித்து சுவிஸின் வோட் மண்டலத்தில் நடைபெற்ற வழக்கில், இந்த திருமணம் மிகவும் போலித்தனமாக உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அந்த வாலிபர் இடம்பெயர்வு நோக்கம் கருதியே உங்களை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார் என கூறி, இவர்களது திருமணத்தை நிறுத்தியுள்ளது. இந்த முடிவினை மூதாட்டியும் ஏற்றுக்கொண்டார்.
Average Rating