கள்ளக்காதலை கண்டித்ததால் டெம்போ டிரைவருடன் ஓட்டம் பிடித்த பெண்…!!

Read Time:3 Minute, 0 Second

201605262042321703_girl-with-the-flow-of-the-tempo-driver-condemned-husband_SECVPFகள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் டெம்போ டிரைவருடன் ஓட்டம் பிடித்த பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளச்சல் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). பெயர் மாற்றப்பட்டுள்ளது.இவர் டெம்போ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

குமாரின் குழந்தைகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். தனது குழந்தைகளை குமார் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம்.

அதே பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஒருவரின் மனைவியும் அதே பள்ளியில் தனது குழந்தையை விட அழைத்து வருவார். அப்போது குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

பள்ளிக்கு வரும் போது நிகழ்ந்த இவர்களது சந்திப்பு அடிக்கடி தொடர்ந்தது. தனிமையிலும் சந்தித்து இனிமை காண தொடங்கினார்கள். நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அந்த பகுதியில் பரவியது. அந்த பெண்ணின் கணவர் கவனத்திற்கும் இதுசென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியை கண்டித்தார்.

கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறினார். இதனால் அந்த பெண் இதுபற்றி தனது கள்ளக்காதலனிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் கள்ளக்காதலை தொடர ஊரை விட்டு ஓட்டம் பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி கள்ளக்காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரில் இருந்து மாயம் ஆனார்கள்.

இதுபற்றி டெம்போ டிரைவரின் குடும்பத்தினர் குளச்சல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது கள்ளக்காதல் ஜோடி விழுப்புரத்தில் வீடு எடுத்து தங்கி உள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குளச்சல் போலீசார் அங்கு சென்று கள்ளக்காதல் ஜோடியை குளச்சலுக்கு அழைத்து வந்தனர்.

குளச்சல் போலீஸ் இன்ஸ் பெக்டர் சிவராஜ்பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் பென்னி ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் கள்ளக்காதல் ஜோடியின் குடும்பத்தினரை அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படாமையினால் முதியவர் உயிரிழப்பு..!!
Next post சாலையில் 8 லட்ச ரூபாயை தவறவிட்ட நபர்: பெண்ணின் நேர்மைக்கு கிடைத்த பரிசு..!!