ஊட்டி: 120-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது…!!

Read Time:3 Minute, 9 Second

201605270706106048_ooty-120th-Flower-Show-starts-today_SECVPFஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 120-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. 1¼ லட்சம் மலர்களால் சென்னை சென்டிரல் மாதிரி ரெயில் நிலையம் வடிவமைக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான ஊட்டியில் கோடை சீசனை அனுபவிக்க பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 21-ந் தேதி பழக்கண்காட்சி நடைபெற்றது.

இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 120-வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவை தற்போது பூத்துக்குலுங்குவதால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் பூங்கா மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மலர் தொட்டிகளை கொண்டு நட்சத்திரம், கோபுரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியை முன்னிட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கார்னேசன், ரோஜா மலர்களை கொண்டு 68 அடி நீளத்தில், 10 அடி அகலத்தில், 30 அடி உயரத்தில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மாதிரி வடிவமைக்கப்படுகிறது.

இதுதவிர 10 அடி நீளமும், 4 அடி அகலமும், 6 அடி உயரமும் கொண்ட சிட்டுக்குருவி அலங்காரம் 75 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

கண்காட்சியில் 5 முகப்பு மலர் அலங்காரம், ஆர்க்கிட் மலர்களால் ஆன 5 அலங்கார வளைவுகள் மற்றும் அரிய வகை மலர்களும் வைக்கப்படுகிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துலிப் மலர்களும், தனியார் அரங்குகளும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

கண்காட்சி நடைபெறும் 3 நாட்களும் பூங்காவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து உள்ள குழுவினரின் கலாசார நடனங்களும் நடக்கிறது. இறுதி நாளான 29-ந் தேதி சிறந்த தனியார் பூங்காக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன்களின் கட்டளைகளைக்கு கீழ்படிய மறுத்தால் மனைவி அடி: பாகிஸ்தான் மத அமைப்பு பரிந்துரை..!!
Next post இந்தியாவிலேயே முதல் முறையாக 6 கிலோ 800 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை..!!