பாம்பு கடித்ததால் கோமா நிலை மூளைச்சாவு அடைந்த குழந்தை உயிர் பிழைத்தது…!!

Read Time:2 Minute, 40 Second

201605271750589096_Snake-biting-child-survived-a-coma-after-brain-death_SECVPFதஞ்சை மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் விக்னேஷ் (2). இவன் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தான்.

அப்போது திடீரென சுய நினைவை இழந்தான். குழந்தை அசைவின்றி இருப்பதை பார்த்த பெற்றோர் அவனை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தை முளைச்சாவு அடைந்ததற்கான அறிகுறிகளுடனும் மற்றும் லாக்டு இன் என்ற வினோத நிலையில் இருந்தான்.

குழந்தையை பரிசோதித்த குழந்தைகள் நல மருத்துவர் ரஹ்மான் கான் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சரவண வேல் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் குழந்தையை கட்டு விரியன் பாம்பு கடித்துள்ளதை கண்டறிந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கோமாவிற்கு சென்ற சிறுவனுக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

டாக்டர்களின் நேரடி கண்காணிப்பில் 72 மணி நேரம் சிகிச்சைக்கு பின் சிறிய முன்னேற்றம் காணப்பட்டது. தொடர்ந்து 5 நாள் சிகிச்சைக்கு பின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.

குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்த டாக்டர் ரஹ்மான் கான், அவசர சிகிச்சை பிரிவு தலைமை டாக்டர் சரவண வேல் மற்றும் மருத்துவ குழுவினருக்கு சிறுவனின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து டாக்டர் ரஹ்மான்கான் கூறும் போது, வட மாநில கிராமங்களில் லாக்டு இன் நிலையில் இருந்த பல குழந்தைகள் உயிருடன் கோமா நிலையில் இருப்பதை முறையாக கண்டறியாததால் இறந்ததாக முடிவு செய்து விட்டனர்.

இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் தேவை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை பாண்டிபஜார் பூவியாபாரி கொலையில் 7 பேர் சிக்கினர்..!!
Next post சவுதியில் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது பொறாமை கொண்ட கணவர்: நடந்த விபரீதம்..!!