அழகான கையெழுத்துக்காக விருது வாங்கிய கையில்லாத சிறுமி…!!

Read Time:4 Minute, 10 Second

handwrittign_super_002.w540‘தலையெழுத்து சரியில்லை’, ‘நேரம் நல்லா இல்லை’ என்று விதி மீது பழிபோடுபவர்கள், தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பார்கள். வர்ஜீனியாவைச் சேர்ந்த அனையா எல்லிக் (Anaya Ellick), இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.

பிறப்பிலேயே குறைபாடுடன் பிறந்த அனையா எல்லிக், தன் மன உறுதியை விடாமல், ஜெயித்துக் காட்டி, பாராட்டு மழையில் நனைத்துவருகிறார். மணிக்கட்டுக்குக் கீழே கைகள் இல்லாமல் பிறந்த அனையா, பிறரை எதிர் பார்க்காமல் தானாகவே தன் வேலைகளைச் செய்துகொள்ளப் பழகிக்கொண்டார். இரண்டு கைகளுக்கு நடுவே பேனாவை வைத்துக்கொண்டு எழுதப் பழகினார்.

கைகள் இரண்டும் நன்றாக இருப்பவர்களிலேயே பலரது எழுத்துக்களை படிக்கவே முடியாத அளவுக்கு கிறுக்கல்களாக இருக்கும். ஆனால் கைவிரல்கள் இல்லாமல் எழுதிய அனையா எல்லிக்கின் அழகான கையெழுத்திற்காக, 2016-ம் ஆண்டுக்கான நிக்கோலஸ் மாக்ஸிம் சிறப்பு விருது (Nicholas Maxim Special Award) கிடைத்துள்ளது அந்நாட்டவர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

வெர்ஜீனியாவில் உள்ள ‘க்ரீன்பேரியர் க்ரிஸ்டியன் அகாடமியில் (Greenbrier Christian Academy) முதல் கிரேடு படித்துவருகிறார் அனையா. அழகான கையெழுத்துப் போட்டியை Zaner-Bloser என்ற கல்வி நிறுவனம், உடல் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு இடையே, ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இந்த போட்டியில், முதல் கிரேடு தொடங்கி 8-ம் கிரேடு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டியில், சுமார் 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அனையாவின் முத்து முத்தான கையெழுத்தைக் கண்ட நடுவர்கள், ”இரண்டு கைகளும் இருப்பவர்கள்கூட இவ்வளவு அழகாக எழுதமாட்டார்கள்” என பிரமித்துப்போனார்கள்.

இதுகுறித்து அனையாவின் பெற்றோர்கள், ‘அனையா கைகள் இல்லாமல் பிறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். கவலையோடு இருந்த நாங்கள், இவளது சுறுசுறுப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எல்லாவற்றையும் உடனே கற்றுக்கொள்கிறாள். டிரெஸ் போட்டுக்கொள்வது, ஷூவுக்கு லேஸ் கட்டிக்கொள்வது என எல்லாவற்றையும் தானாகவே செய்துகொண்டு பள்ளிக்கு ரெடி ஆகிவிடுகிறாள்.

பியானோ நன்றாக வாசிக்கிறாள். அழகான கையெழுத்துப் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம், முதல் பரிசாக 1,000 டாலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது. தற்போது உலம் முழுவதிலும் இருந்து, அனையாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன” என்கின்றனர் பெருமிதத்துடன்.

ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படித் தோன்றியது எனக் கேட்டதற்கு, ”எனக்கு ரோல்மாடல் 30 வயது ஜெசிக்கா காக்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கும் இரண்டு கைகள் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தூங்கும் முன் இதுல ஒரு டம்ளர் குடிங்க..!!
Next post நடனத்தில் பசங்களுக்கு போட்டியாக களமிறங்கிய பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை..!!