மலேசியாவில் வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன்…!!

Read Time:2 Minute, 16 Second

201605290936536353_Malaysian-boy-lived-with-unborn-twin-inside-him-for-15-years_SECVPFமலேசியா நாட்டில் உள்ள கேடா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜூல் ஷஹ்ரில் சைதீன் (15) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துப்போன கரு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது, இவரது தாய் கர்ப்பம் தரித்தபோது இரட்டை கருக்கள் உருவாகியுள்ளன,

அதில், ஒரு கருவானது ஜூலின் தொப்புள் கொடி வழியாக அவரது வயிற்றுக்குள் சென்று தங்கிவிட்டுள்ளது.

இதைஅறியாத அவரது தாயார், தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து ஜூலுவை வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில், ஜூலு வயிற்றுக்கள் இருந்த கருவின் கை, கால்கள், தலைமுடி மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்பு போன்றவை வளர்ச்சியடைந்துள்ளது.

ஆனால், முகத்தில் உள்ள கண், மூக்கு, வாய் போன்றவை மட்டும் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை.

இரட்டை கருக்கள் உருவாகும் பட்சத்தில், அதில் ஒரு கரு மற்றொரு கருவின் தொப்புள் கொடியின் வழியாக சென்று அங்கு வளர்ச்சியடையும், ஆனால், எப்போது தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவருகிறதோ அப்போதே, இந்த கருவானது உயிரிழந்துவிடும், இக்கரு வாழ்வதற்கான எவ்வித சாத்தியக்கூறும் இல்லை. இது 5 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அரிதான நிகழ்வாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, ஜூலுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் அவனது வயிற்றில் 15 ஆண்டுகளாக தங்கியிருந்த இருந்த கருவானது, வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு! அடித்துக் கொலை செய்த கணவன்..!!
Next post ஜப்பானிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்…!!