இந்த ரஷிய தம்பதியரின் குடும்பத்தில் 23 வயது கரடியும் ஓர் செல்லப்பிள்ளை…!!

Read Time:2 Minute, 0 Second

201605301453439541_Russian-couple-live-with-adopted-7ft-bear_SECVPFரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதியரின் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்துவரும் ஏழுஅடி உயர கரடி மனிதர்களைப் போலவே அவர்களுக்கு துணையாக இருந்து வருகிறது.

ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதியரின் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்துவரும் ஏழுஅடி உயர கரடி மனிதர்களைப் போலவே அவர்களுக்கு துணையாக இருந்து வருகிறது.

ரஷியாவில் வசிக்கும் ஸ்வெட்லானா – யூரி பன்டெலீன்கோ தம்பதியர் ஏழடி உயரமும் 300 பவுண்டு எடையுமுள்ள 23 வயது கரடியை வளர்த்து வருகின்றனர். அன்றாடம் 25 கிலோ மீன்வகைகளையும், முட்டைகள் மற்றும் ஏராளமான காய்கறிகளையும் தின்று தீர்க்கும் இந்த கரடியை மூன்றுமாத குட்டியாக கண்டெடுத்து, ஸ்டெபான் என்ற பெயரிட்டு இவர்கள் வளர்த்து வருகின்றனர்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களுடன் பழகிப்போன இந்த கரடி, வீட்டு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுகிறது. பந்து விளையாடுகிறது. மற்றவர்களுடன் அமர்ந்து டி.வி. பார்த்து, டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுகிறது. வளர்ப்பு தாயைவிட தந்தையின்மீது மிகவும் பாசமாக இருக்கும் ஸ்டெபான் அவருடன் அடிக்கும் செல்ல லூட்டிகள் பார்ப்பவர்களை பரவசப்பட வைக்கிறது.

ரஷியாவின் பிரபல மாடல் அழகியுடன் இந்த கரடி தோன்றும் விளம்பரப்படம் அங்கு மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவைக்காண..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறு செய்த 7 வயது மகனை நடுக்காட்டில் தனியே தவிக்கவிட்டு தண்டனை அளித்த பெற்றோர்: தேடும் பணி தீவிரம்…!!
Next post ஆஸ்திரேலியாவை மிரட்டும் 1 லட்சம் வவ்வால்கள்…!!