By 3 June 2016 0 Comments

பணம் கேட்டு கொடுக்க மறுத்த தந்­தையை எரித்து துண்டு துண்­டாக வெட்­டிய மக­ன்..!!

17047465943879-1260x650_01062016_R25_CMYபணம் கேட்டு கொடுக்­கா­த­தாலும் தந்தை மீது ஏற்­பட்ட வெறுப்­பாலும் பெற்ற மகனே, தந்­தையை சுட்­டுக்­கொன்று எரித்து, உடலை துண்டு துண்­டாக வெட்டி வீசிய சம்­ப­வ­மொன்று கேர­ள­மா­நி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கேரள மாநிலம், ஆலப்­புழா மாவட்டம் செங்­கனுார் பகு­தியைச் சேர்ந்­தவர் ஜோன், 63. தொழி­ல­தி­ப­ரான இவர், சில காலம் அமெ­ரிக்­காவில் வசித்­துள்ளார்.

இவ­ரது மகன் ஷெரின் 31.சில தினங்­க­ளுக்கு முன், இரு­வரும் காணாமல் போயுள்­ளனர்.

இதனால் பதற்­ற­ம­டைந்த ஜோனின் மனைவி பொலிஸ் நிலை­யத்தில் கணவன் மற்றும் மகன் மாய­மா­னது குறித்து முறைப்­பாடு அளித்­துள்ளார்.

மாரி­யம்மாள் அளித்த முறைப்­பாட்டின் அடிப்­ப­டையில், பொலிஸார் இரு­வ­ரையும் தேடி வந்­தனர். செங்­க­னுாரில், மகன் ஷெரினை, தனிப்­படை பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர். பின்னர் விசா­ரணை நடத்­தி­யுள்­ளனர். அப்­போது ‘எது­வுமே தெரி­யாது’ என, அவர் கூறி­யுள்ளார்.

இதனால் சந்­தே­க­ம­டைந்த பொலிஸார் தொடர்ந்து நடத்­திய விசா­ர­ணையில் , ‘பணம் கொடுக்­காத ஆத்­தி­ரத்தில், தந்­தையை கொலை செய்தேன்’ என, ஷெரின் கடந்த திங்கட் கிழமை ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

இது குறித்து பொலி­ஸா­ரிடம் அவர் அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, மே, 25ஆம் திகதி தந்தை ஜோனுடன் காரில் திரு­வ­னந்­த­புரம் சென்று, வாடகை பணம் ஒரு இலட்சம் ரூபாயை வசூல் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தோம்.

அப்­போது, பணம் தரும்­படி தந்­தை­யிடம் நான் கேட்டேன். ஆனால், அவர் பணம் தர­வில்லை. இதனால் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. அப்­போது நான் எடுத்துச் சென்ற துப்­பாக்­கியால், அவரை நோக்கி சுட்டேன் தந்தை இரத்­த ­வெள்­ளத்தில் காருக்குள் சாய்ந்தார்.

பின், காரை ஓட்டிச் சென்றேன். ஆள் இல்­லாத இடத்தில், தந்­தையின் உடலை எரித்தேன். ஆனால், முழு­மை­யாக எரி­ய­வில்லை. பின், ஆறு துண்­டு­க­ளாக அவ­ரது உடலை வெட்டி, வெவ்­வேறு பகு­தி­களில் வீசினேன் என தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து, தந்­தையின் உடல் பாகங்­களை தேடி எடுப்­ப­தற்­காக, ஷெரி­னையும் அழைத்துக் கொண்டு பொலிஸார் சென்­றனர். அவர் காட்­டிய இடங்­க­ளி­லி­ருந்து, உடல் பாகங்கள் மீட்­கப்­பட்­டன.

ஷெரினை கைது செய்த பொலிஸார் சிறையில் அடை­தஸார் ஜோனின் உடல், பிரேத பரி­சோ­த­னைக்கு பின், உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டது.

இத­னி­டையே ஆலப்­பு­ழாவில், பம்­பை­யாற்றில் குளித்துக் கொண்டு இருந்த சிலர், கை ஒன்று மிதந்து வரு­வதை பார்த்து பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­வித்­தனர் அந்தக் கையையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்தே பொலிஸார் சந்­தேகம் அடைந்து, ஷெரி­னிடம் கடு­மை­யான முறையில் விசா­ரணை நடத்­தி­யுள்­ளனர். ஷெரினை அழைத்துச் சென்று, ஜோனின் கரு­கிய உடல், தலை போன்ற உடல் பாகங்­களை வெவ்­வேறு இடங்­க­ளி­லி­ருந்து பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

என் தந்தை, சிறு­வ­யதில் இருந்தே, பாசத்தை விட, பணத்தின் மீதே ஆர்வம் காட்­டினார். இதனால் தந்தை மீது வெறுப்பு என மகன் ஷெரின் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.Post a Comment

Protected by WP Anti Spam