செங்குத்தான 800 மீற்றர் உயரமான மலையைக் கடந்து பாடசாலைக்குச் செல்லும் சிறார்கள்..!!

Read Time:1 Minute, 56 Second

17068c1சீனா­வி­லுள்ள கிரா­ம­மொன்றைச் சேர்ந்த மாண­வர்கள் 800 மீற்றர் உய­ர­மான செங்­குத்­தான மலையைக் கடந்து பாட­சா­லைக்குச் சென்று வரு­கின்­றனர்.

சிச்­சுவான் மாகா­ணத்தின், அட்­டுலீர் எனும் இக்­ கி­ரா­மத்தைச் சேர்ந்த 6 முதல் 15 வய­தான 15 சிறார்­களே கல்­விக்­காக இவ்­வா­றான பய­ணத்தை மேற்­கொள்­கின்­றனர்.

அட்­டுலீர் கிரா­மத்தில் விவ­சா­யி­க­ளான 72 குடும்­பங்கள் வசிக்­கின்­றன. இக்
கு­டும்­பங்­களைச் சேர்ந்த சிறார்கள் பாட­சா­லைக்குச் செல்­வத்­றகு 800 மீற்றர் (2625 அடி) உயர பாறையை கடக்க வேண்­டி­யுள்­ளது.

இதற்­காக இவர்கள் 17 மூங்கில் ஏணி­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றனர். உலகில் பாட­சா­லைக்கும் வீட்­டுக்கும் இடை­யி­லான மிக ஆபத்­தான பயணம் இது என வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது.

சென் ஜீ எனும் புகைப்­ப­டப்­பி­டிப்­பாளர் மூலம் இவ் ­வி­டயம் வெளி­யு­ல­குக்குத் தெரி­ய­வந்­துள்­ளது. இதை­ய­டுத்து, மேற்­படி சிறார்கள் பாட­சா­லைக்குச் சென்று வரு­வ­தற்­கான பாது­காப்­பான தெரி­வுகள் குறித்து ஆராய்­வ­தற்­காக உள்ளூர் அதி­கா­ரிகள் அக்­கி­ரா­மத்­துக்குச் சென்­றுள்­ளனர்.

செலவு அதி­க­மான போதிலும் இக் கிராமத்துக்கான வீதியொன்றை நிர்மாணிப் பது குறித்து அவர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழைப்பழம் தேங்காய் தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..?
Next post குழந்தைகள் பெறுவதில் “செஞ்சுரி” அடிக்கத் துடிக்கும் 35 பிள்ளைகளின் தந்தை..!!