தந்தை மீது புகார் அளிக்க போலீசுக்கு போன் செய்த சிறுவன்: அவர் அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Read Time:2 Minute, 6 Second

03-1464938880-police-usa23-600அமெரிக்காவில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தும் காரை நிறுத்தாமல் சென்ற தனது தந்தை குறித்து 6 வயது சிறுவன் போலீசாருக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் ராபி ரிச்சர்ட்சன்(6).

அவர் தனது தந்தை மைக்கேல் ரிச்சர்ட்சனுடன் காரில் வெளியே கிளம்பினார். அப்போது சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தும் மைக்கேல் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.

இதை பார்த்த ராபி தனது தந்தையை பார்த்து போக்குவரத்து விதியை மீறிவிட்டீர்களே என்று கேட்டதற்கு, பரவாயில்லை என அவர் தெரிவித்தார். இருங்க நான் போலீசில் புகார் செய்கிறேன் என ராபி கூறியதை மைக்கேல் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வீட்டிற்கு வந்ததும் ராபி முதல் வேலையாக 911 எண்ணுக்கு போன் செய்து தனது தந்தை போக்குவரத்து விதியை மீறியதாக புகார் தெரிவித்தார். போலீசார் போனை மைக்கேலிடம் அளிக்குமாறு கூறினர்.

வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த தனது தந்தையிடம் அவர் போனை அளித்தார். மைக்கேல் போனை வாங்கி ஹலோ சொன்னபோது மறுமுனையில் பேசியவர் க்வின்சி போலீசில் இருந்து பேசுகிறோம் என்று கூறியதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அதன் பிறகே ராபி தன்னிடம் கூறியது விளையாட்டு அல்ல என்பது மைக்கேலுக்கு தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெலிகாப்டரை வைத்து மகன் பல்லை கழற்றிய தந்தை..!!
Next post ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை… காரணம் என்ன?- வீடியோ..!!