குறும்பு செய்த மகன்… மனிதாபிமானமின்றி அடர்ந்த காட்டில் தவிக்கவிட்ட பெற்றோர்..!!

Read Time:1 Minute, 38 Second

forest_boy_002.w540ஜப்பானில் குறும்பு செய்ததற்காக பெற்றோரால் அடர்ந்த காட்டில் தனித்துவிடப்பட்ட 7 வயது சிறுவன் ஒருவாரத்துக்குப் பிறகு ராணுவத்தால் மீட்கப்பட்டார்.

ஜப்பானின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யமாட்டோ டநாகா என்ற 7 வயது சிறுவன், அதிக அளவில் குறும்பு செய்வதாகக் கூறி அவனது பெற்றோர் அடர்ந்த காட்டில் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டனர். சிறிது நேரத்தில் டநாகாவைக் கண்டுபிடித்துவிடலாம் என்று பெற்றோர்கள் எண்ணியது நடக்கவில்லை.

இதனால், பொலிசில் பெற்றோர் புகார் அளிக்க, ராணுவத்தின் உதவியுடன் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு மேலாகத் தேடிவந்தனர். இந்தநிலையில், அந்தக் காட்டுப்பகுதியில் உள்ள ராணுவ மையத்துக்கு அருகில் அந்த சிறுவனை தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர் கண்டுபித்தனர்.

கடும் குளிரும், கன மழையும் பொழியும் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் 7 நாட்களுக்கு மேலாக சிறுவன் தாக்குப்பிடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணு வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஐபோன்…!!
Next post இரவு தூங்குவதற்கு முன்னால் சாப்பிடக் கூடாத உணவுகள்…!!