By 7 June 2016 0 Comments

கொய்யாப்பழத்தை வீசி விட்டு நகைக் கடையிலிருந்து பணத்தை திருடிய குரங்கு..!! (வீடியோ)

timthumbகொய்­யாப்­ப­ழத்­தினைக் கடை­யினுள் வீசி­விட்டு கடை­யி­லி­ருந்து 10,000 ரூபா பணக்­கட்டைத் தூக்கிக் கொண்டு குரங்­கொன்று மாய­மா­கி­யுள்­ளது.

இந்­தி­யாவின் ஆந்­தி­ராவில் நகைக்­கடை ஒன்­றிற்குள் நுழைந்த குரங்­கொன்று கடையின் காசுப் பெட்­டி­யி­லி­ருந்து 10,000 ரூபாய் பணத்தைத் தூக்கிச் சென்ற சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறித்த சம்­ப­வத்­தன்று ஆந்­திர மாநிலம், குண்டூர் மாவட்­டத்­தி­லுள்ள நகைக் கடைக்குள் குரங்கு ஒன்று நுழைந்­தது.

வழ­மையில் குரங்கு பழங்­களைத் தானே திருடிச் செல்லும் என நினைத்து கடை ஊழி­யர்கள் கவ­னக்­கு­றை­வாக இருந்­துள்­ளனர்.

அப்­போது தான் சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்த கொய்­யாப்­ப­ழத்தை நகைக்­க­டைக்குள் வீசிய குரங்கு, சுமார் 20 நிமி­டங்கள் வரை கடையில் உள்ள மேசைகள் மீது தாவி குதித்து, குள­று­ப­டி­களை செய்­துள்­ளது.

இறு­தியில் காசுப் பெட்­டி­யினைத் திறந்து, அதி­லி­ருந்து 100 ரூபாய் பணக்­கட்­டொன்றை எடுத்­துக்­கொண்டு படிக்­கட்டின் வழி­யாக அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளது.

குரங்கைப் பின்­தொ­டர்ந்து சென்ற கடையின் ஊழி­யர்­களின் முயற்சி பல­னின்றி போயுள்­ளது.

இருந்தும் குறித்த குரங்கின் குறும்­புத்­த­ன­மான செயற்­பா­டுகள் அங்­கி­ருந்த இர­க­சிய கம­ராவில் பதி­வா­கி­யுள்­ளது. மேலும் குரங்கின் இந்த செயற்­பா­டு­களை வைத்து, யாராலோ பயிற்சி வழங்­கப்­பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என கடையின் ஊழியர்கள் மேலும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam