பாலில், துளசி சேர்த்து குடிப்பதால் உண்டாகும் அற்புத நன்மைகள் பற்றி தெரியமா…!!

Read Time:3 Minute, 41 Second

09-1465452321-1whathappenstoyourbodywhenyoudrinktulsiwithmilkதுளசி ஓர் சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை உணவு பொருளாகும். நமது பண்டைய காலத்தில் இருந்து துளசியை தினமும் சிறிதளவு உட்கொள்ள கூறுவதன் காரணமே, இது செரிமான கோளாறுகள் உண்டாகாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டிருப்பதால் தான்.

மேலும், துளசியை சுவாசித்தாலே சுவாசக் கோளாறுகள் குணமாகும். துளசி நிறைய மருத்துவ குணங்கள் கொண்டுள்ள சிறந்த மூலிகையாகும்.

பால், நம் அனைவருக்கும் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள். பால் நமது உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் உடற்சக்தியை தரவல்லது. இந்த இரண்டு சிறந்த உணவு பொருளையும் சேர்த்து பருகுவதால் அடையும் நன்மைகள் குறித்து இனிக் காணலாம்…

நன்மை # 1

பாலுடன் துளசி சேர்த்து பருகுவதால், காய்ச்சலை விரைவாக குணப்படுத்த முடியும். துளசியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பொருள்களும், பாலில் இருக்கும் நோய் குணப்படுத்தும் பொருள்களும் உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலின் அளவை குறைக்க பயனளிக்கின்றன.

நன்மை # 2

இதய நலன் மேன்மை! துளசியில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் யூஜினால் மனித இதயத்தின் நலனை ஊக்குவித்து, வலிமையடைய உதவுகிறது. பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு நன்கு ஆக்ஸிஜன் சென்று வர உதவுகிறது.

நன்மை # 3

மன அழுத்தம் குறையும்! சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால் உடலின் நரம்பு மண்டலம் ரிலாக்ஸாக உணர முடியும். மேலும், இது மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி பதட்டம், மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.

நன்மை # 4

சிறுநீரக கற்கள்! துளசி மற்றும் பாலின் கலவை சிறந்த டையூரிடிக் ஆகும். இது யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தவிர்க்கிறது. மேலும், சீராக சிறுநீரக கற்களை கரைக்கவும் உதவுகிறது.

நன்மை # 5

புற்றுநோய்! துளசி, பால் இரண்டிலும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை, உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, புற்றுநோய் செல்கள் உண்டாகாமல் இருக்க உதவுகின்றன.

நன்மை # 6

சுவாசக் குழாய் கோளாறுகள்! சூடான பால் மற்றும் துளசியின் கலவையில் ஆண்டி-பாக்டீரியல் பொருட்கள் இருக்கின்றன. இவை, தொண்டை கரகரப்பு, சளி, வறட்டு இருமல் போன்றவைற்றை சரி செய்ய உதவுகிறது.

நன்மை # 7

தலைவலி! தீராத தலைவலி இருப்பவர்கள், பாலில் துளசி சேர்த்து குடித்து வரலாம். சூடான பாலில் துளசி சேர்த்து குடித்து வருவதால் தலைவலி குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் உறவை கொல்லும் 6 அசிங்கமான செயல்கள்…!!
Next post A9 முறிகண்டியில் விபத்து..!!