முன்னாள் காதலியின் நெருக்கமான வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட காதலர்..!!
தெலுங்கானா மாநிலத்தில் காதலர் ஒருவர் தனது முன்னாள் காதலியுடன் இருந்த நெருக்கமான வீடியோ ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு அவரது காதலிக்கு வேறு நபருடன் திருமணம் அடைந்த நிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனம்கோன்டா பகுதியைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண்(23). கடந்த 2012- 2014 ஆண்டுகளில் இவர் அமீர்பெத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மல்டிமீடியா படித்து வந்தார்.
அவருடன் குர்நுல் பகுதியைச் அனில் என்பவர் படித்து வந்தார். அப்போது அனில் மற்றும் அந்த பெண் இருவரிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அனில் மற்றும் அந்த பெண் ஆகியோர் தனிமையாக உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணுக்கு தெரியாமல் அனில் அதை வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு அந்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே, அனில் தான் வைத்திருந்த அந்த உல்லாச வீடியோவைக் கொண்டு, அந்த பெண்ணை பிளாக் மெயில் செய்து வந்துள்ளார்.
மேலும், அந்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த விஷயமானது அந்த பெண்ணுக்கு அவரது நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர், அந்த பெண்ணின் கணவருக்கு இந்த விஷயம் தெரியவரவே, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்த அந்த நபரின் மீது ஐடி சட்டத்தன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
Average Rating