லண்டனில் நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடும் ஓட்டல்..!!

Read Time:3 Minute, 0 Second

201606101459535298_Londons-first-naked-restaurant-opens_SECVPFலண்டனில் மிக புதுமையான ஓட்டல் ஒன்று நாளை திறக்கப்பட உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மிக புதுமையான ஓட்டல் ஒன்று நாளை (11-ந்தேதி) திறக்கப்பட உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.

தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள் எதுவும் இருக்காது. அதில் ரசாயன பொருட்கள், செயற்கை தனமான வண்ணங்கள் கலக்கப்பட மாட்டாது.

உணவு சாப்பிடும் இடத்தில் மின்சார வசதி, செல்போன் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. இவை அனைத்தையும் விட உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக அமர்ந்து பொழுதை கழிக்கலாம். அல்லது பாதி உடை அணிந்து அரை நிர்வாணமாகவும் உணவு அருந்தலாம்.

இங்கு ஒயின் மட்டுமே சப்ளை செய்யப்படும். விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மற்ற மதுபான வகைகள் சப்ளை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு நிர்வாணமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு ‘பர்த்டே’ அறை ஒதுக்கப்படும். இந்த ஓட்டலுக்கு இந்தியில் ‘புனிபாதி’ என பெயரிட்டுள்ளனர். இதற்கு தமிழில் ‘அடிப்படை’ என அர்த்தமாகும். இந்த புதுமையான ஓட்டலை லண்டனை சேர்ந்த செப்லியாலி என்பவர் தொடங்கியுள்ளார்.

சாப்பிட வரும் பொது மக்கள் எந்தவித கவலையுமின்றி மகிழ்ச்சியாக இரவு பொழுதை கழிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஓட்டலை பார்த்து பார்த்து பிரத்யேகமாக வடிவமைத்துள்ளோம்.

இங்கு மூங்கிலால் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சைவப்பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களுக்கு என்று தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது. இங்கு 42 இருக்கைகளே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஓட்டல் தொடங்குவதற்கு முன்பே இதற்கு ‘கிராக்கி’ அதிகரித்துள்ளது. 3700 பேர் ‘புக்’ செய்து ‘வெயிட்டிங் லிஸ்ட்’ டில் அதாவது காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணகோஷ்டி பயணம் செய்த மினிபேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவன் பலி, 35 பேர் காயம் – வீடியோ..!!
Next post சென்னையில் பட்டப்பகலில் 130 பவுன் நகை-பணம் கொள்ளை…!!