சூரிய ஆற்றலின் மூலம் உலகைச் சுற்றிப் பறக்கும் சோலார் இம்பல்ஸ் விமானம் நியூயார்க் நகரை அடைந்தது..!!

Read Time:4 Minute, 38 Second

201606111538557526_Solar-plane-lands-in-New-York-City-during-bid-to-circle-the_SECVPFஒரே ஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ நவீன விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பிய சோலார் இம்பல்ஸ் விமானம், உலகம் முழுவதும் பறக்கும் லட்சியப் பயணத்தை தொடரும் வகையில் சீனாவின் கிழக்கு பிராந்தியமான நான்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை நோக்கி புறப்பட்டது.

சுமார் 8,500 கிலோமீட்டர் தூரத்திற்கான இப்பயணத்தில் 62 வயதான விமானி உலகின் முதல் சூரிய சக்தி விமானமான சோலார் இம்பல்ஸ், தனது மிக முக்கியமான பயணமான சீனாவில் இருந்து மத்திய பசிபிக் நோக்கி தொடர்ந்து 6 இரவு மற்றும் 6 பகல் நிற்காமல் பறக்கும் கனவு பயணத்தை தொடங்கியது.

ஏமேலிம், ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றவுள்ள இந்த விமானம், சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க திட்டமிடப்பட்டிருந்தது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமானம், ஒரு சொட்டு விமான எரிபொருளைக் கூட உபயோகப்படுத்தாமல் மூன்று கண்டங்களையும், இரண்டு கடற்பரப்புகளையும் கடக்கும் என அறிவிக்கப்பட்டது.

சோலார் இம்பல்ஸ் விமானத்தின், உலகம் முழுவதும் பறக்கும் லட்சியப் பயணத்தை தொடரும் வகையில் கடந்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி சீனாவின் கிழக்கு பிராந்தியமான நான்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை நோக்கி புறப்பட்டது. பல நாடுகளை கடந்து, சுமார் 8,500 கிலோமீட்டர் தூரத்திற்கான இப்பயணத்தில் 62 வயதான விமானி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் மற்றும் துணை விமானியான பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகியோர் இவ்விமானத்தை ஓட்டிச்சென்றார்.

இதன் பின்னர், அமெரிக்காவின் பல மாநிலங்களின் வழியாக வலம்வந்து கொண்டிருக்கும் இந்த விமானத்தை நேற்று ஒக்லஹாமா மாநிலத்தில் இருந்து ஓஹியோ மாநிலத்துக்கு ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஓட்டிச் சென்றார். சுமார் 16 மணிநேர பயணத்துக்கு பின்னர் உள்ளூர் நேரப்படி கடந்த மாதம் 22-ம் தேதி இரவு 9.56 மணியளவில் (இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.56 மணி) ஓஹியோவில் உள்ள டேட்டன் விமான நிலையத்தில் அவர் பத்திரமாக தரையிறக்கினார்.

திட்டமிடப்பட்ட பயணநேரத்தைவிட ஒருமணி நேரத்துக்கு முன்னதாகவே ஓஹியோவுக்கு வந்துசேர்ந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் கட்டித்தழுவி வரவேற்று, பாராட்டினர்.

பின்னர், ஓக்லஹாமாவில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் பல மாநிலங்களின் வழியாக கடந்து வந்த சோலார் இம்பல்ஸ் விமானம், அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையின்மீது பறந்தபடி, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணி) நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தை வந்தடைந்தது.

இத்துடன் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்யும் சோலார் இம்பல்ஸ், நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு அபுதாபி நாட்டில் தனது பயணத்தை முடிக்கவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகங்கையில் இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி- வீடியோ…!!
Next post ‘கரு கரு’ கூந்தலுக்கு காய்கறி வைத்தியம் போதும்ங்க…!!