பாபநாசம் அருகே ஓட்டல்களில் தீவிபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…!!

Read Time:3 Minute, 39 Second

201606111057257251_Papanasam-near-hotels-fire-rs-5-lakhs-worth-of-materials_SECVPFஅய்யம்பேட்டை கள்ளர் தெருவில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் அப்துல்ரகுமான் மகன் அஜ்ஜீத்முகமது (வயது 47), இவரது கடைக்கு அருகில் பந்தநல்லூர் மோட்டார் குளத்துதெருவை சேர்ந்த மதிவாணன் (64) என்பவர் சோடா கம்பெனி நடத்தி வருகிறார். அதற்கு அருகில் சக்கராபள்ளி புது தெருவை சேர்ந்த அப்துல் மஜ்ஜீத் மகன் அப்துல் ஹக்கிம் (48) என்பவரும் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்.

இந்த 3 கடைகளும் அருகருகே அமைந்துள்ளன. மதிவாணன் தினமும் வேலை முடிந்த இரவு 9 மணிக்கெள்லாம் கம்பெனியை மூடிவிட்டு சென்றுவிடுவார். மற்ற 2 ஓட்டல் கடைகளும் நள்ளிரவு 12 மணிக்குதான் பூட்டிவிட்டு செல்வார்கள்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஓட்டல்கடை உரிமையாளர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கடைகளை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

அதிகாலை 3 மணியளவில் அஜ்ஜீத்முகமதுவின் ஓட்டலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடையின் உள்புரம் தீபிடித்து எரிந்ததால் வெளியில் தெரியவில்லை.

சிறிது நேரம் கழித்து கடையின் மேல்புரத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது. அதனை தொடர்ந்து கடையில் இருந்து அதிக சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதையடுத்து தீ மளமளவென அருகே இருந்த மதிவாணன் மற்றும் அப்துல்ஹக்கிம் கடைகளுக்கும் பரவியது.

இதனை கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் மேற்பார்வையில் தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைய் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 கடைகளுக்கும் தீ பரவியதை தொடர்ந்து கடைகள் பூட்டப்பட்டு இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து கடையின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடைகளை திறந்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் கடைகளுக்குள் சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 3 கடைகளில் இருந்த பொருட்களும் தீயில் கருகி சேதமானது. மதிவாணனின் சோடா கம்பெனியில் சோடா தயாரிக்கும் எந்திரம் முழுவதுமாக எரிந்தது. இந்த தீவிபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாணை நடத்தி வருகிறார்.

3 கடைகள் தீப்பிடித்து எரிந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூகொடை பிரதேச தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ…!!
Next post செயற்கை இதயத்தை முதுகில் சுமந்தபடி 555 நாட்கள் உயிர்வாழ்ந்த வாலிபர்: வீடியோ இணைப்பு..!!