By 12 June 2016 0 Comments

அமெரிக்க இரவு விடுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு…!!

201606121800116287_Pulse-Night-Club-mass-shootings-Approximately-20-dead-in-the_SECVPFஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இரவு விடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். டவுன் டவுன் ஆர்லந்தோ நகரில் உள்ள பல்ஸ் என்ற இரவு கேளிக்கை விடுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அதிகாலை நேரத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத்துவங்கினார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் உள்ளே இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார், பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் அடைந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த கொடூர தாக்குதலில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆர்லந்தோ நகர தலைமை போலீஸ் அதிகாரி ஜான் மின்னா கூறினார். மேலும் காயமடைந்த 42 பேர் மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என்று ஆர்லந்தோ போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறினர்.

துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam