துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து இங்கிலாந்தில் பெண் எம்.பி. மரணம்..!!

Read Time:1 Minute, 42 Second

201606162347598308_Stabbed-Shot-3-Times-British-Labour-Lawmaker-Jo-Cox-Dies_SECVPFஇங்கிலாந்தில் பெண் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியின் பேட்லி மற்றும் ஸ்பென் ஆகிய பகுதிகளின் எம்.பி.,யாக ஜோ காக்ஸ்(41). இவர், தனது தொகுதிக்கு உள்பட்ட பிர்ஸ்டால் என்ற இடத்தில் நடந்துசென்றபோது, எதிரேவந்த நபரால் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் படுகாயம் அடைந்தார். இதேபோன்று, ஜோ காக்ஸ் உடன் சென்ற நபரும் தாக்குதலுக்கு ஆளானார்.

இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், ஜோ காக்ஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகளவு ரத்தம் வெளியேறியதால், அவர் ஆபத்தான கட்டத்தில் உயிருக்குப் போராடி வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார்.

ஜோ காக்ஸ் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய 52 வயதான அந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கான காரணத்தை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆண் நண்பரை கார் ஏற்றி கொலை செய்ய முற்பட்ட பெண்! -வீடியோ!
Next post விபச்சார வழக்கில் கைதாகிய தமிழ் நடிகைகள் யார் யார் என்று பாருங்கள்! வீடியோ