ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்..!!

Read Time:2 Minute, 30 Second

201606181235483980_European-Football-Spanish-team-progressing-to-the-knockout_SECVPFஐரோப்பிய கால்பந்து போட்டியில் துருக்கி அணியை வீழ்த்தி ஸ்பெயின் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்
நைஸ் (பிரான்ஸ்):

15-வது ஐரோப்பிய கோப்பை (யூரோ) கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ‘டி’ பிரிவில் உள்ள ஸ்பெயின் – துருக்கி அணிகள் மோதின.

இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அல்வாரா மொரடா 2 கோல்களும் (34-வது நிமிடம், 48-வது நிமிடம்), நொலிடோ ஒரு கோலும் (37-வது நிமிடம்) அடித்தனர். பதிலுக்கு துருக்கி அணியால் ஒரு கோல் கூட போட முடியாமல் போனது பரிதாபமே.

இது ஸ்பெயின் பெற்ற 2-வது வெற்றியாகும். அது தொடக்க ஆட்டத்தில் செக் குடியரசுவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. இதன் மூலம் ஸ்பெயின் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.

இது துருக்கி அணி சந்தித்த 2-வது தோல்வியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோற்று இருந்தது. இதன் மூலம் அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு – குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

‘இ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்தது. 2-வது வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெல்ஜியம் – வடக்கு அயர்லாந்து, அங்கேரி – ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல் – ஆஸ்திரியா அணிகள் மோதுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகதி சிறுவர்கள் இருவருடன் கட்டாய உறவு கொண்ட பெண் அதிகாரி: விசாரணைக்கு உத்தரவு..!!
Next post காதலியை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..!!