500 வருடங்கள் பழைமையான கப்பல் சிதைவுகளிலிருந்து 185 கோடி ரூபா பெறுமதியான தங்க நாணயங்கள் மீட்பு…!!

Read Time:2 Minute, 6 Second

17401Untitled-3நமீ­பி­யா­விவில் 500 வரு­டங்கள் பழை­மை­யான கப்பல் சிதை­வு­க­ளி­லி­ருந்து சுமார் 185 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க நாண­யங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

ஆபி­ரிக்கக் கண்­டத்தின் தென் மேற்குப் பகு­தி­யி­லுள்ள நமீ­பிய கரை­யோ­ரத்தில் கப்பல் சிதை­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வது அபூர்­வ­மல்ல. எனினும், அண்­மையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இந்­தக்­கப்பல் சிதைவு மிக விசே­ட­மான ஒன்­றாகும் என நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.

இக்­கப்பல் சிதை­வு­க­ளி­லி­ருந்து பெருந்­தொ­கை­யான தங்க நாண­யங்கள், எலும்­புக்­கூ­டுகள், யானைத்­தந்­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

கடற்­கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­ப­தற்­காக தங்க நாண­யங்கள் பீரங்கிக் குழா­யொன்றில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இவற்றின் பெறு­மதி 13,000,000 அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 185 கோடி ரூபா) என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இரத்­தி­னக்கல் சுரங்க அகழ்வு நட­வ­டிக்­கையின் போதே இக்­கப்பல் சிதை­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த தொல்­பொ­ரு­ளி­ய­லா­ள­ரான கலா­நிதி டியெட்டர் நோலி இப்­ப­கு­திக்கு அழைக்­கப்­பட்டு மேற்­படி பொருட்கள் ஆரா­யப்­பட்­டன.

500 வரு­டங்­க­ளுக்­குமுன் சேர் பிரான்சிஸ்கோ டி நொரோன்ஹா தலைமையில் சென்ற போர்த்துகேய கப்பல் ஒன்று நமீபியாவுக்கு அருகில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குருநாகல் பகுதியில் பங்களாதேஷ் பிரஜைகள் கைது….!!
Next post இலங்கையிலும் இந்த கதியா? ; பெற்றோரே உங்கள் பிள்ளைகள் கவனம்..!!