முப்பது வயதை நெருங்கும் போது, உங்களால் தவிர்க்க முடியாத 7 விஷயங்கள்…!!

Read Time:5 Minute, 28 Second

sventhoughtsyoucannotescapewhenyouareapproaching30-20-1466418375ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமக்கான, நம்மால் தவிர்க்க முடியாத சில கடமைகள், வேலைகள் இறைவனாலே, இயற்கையாகவோ தானாக அமைந்துவிடும்.

குழந்தை பருவத்தில் இருந்து பதின் பருவத்தை கடக்கும் வரை இந்த கடமைகளும், வேலைகளும் சற்று எளிமையாகவும், படிப்பு மட்டும் சற்று கசப்பாகவும் தோன்றும்

ஆனால், பதின் வயதை தாண்டி நீங்கள் கடக்கும் ஒவ்வொரு பருவமும் முள்வேலியை கடந்து செல்வது போன்று மிகவும் சவாலானது. கொஞ்சம் சறுக்கினாலும் கீறல்கள் சரமாரியாக விழும். அதிலும், இருபதுகளை கடந்து முப்பதுகளுக்குள் செல்லும் நபர்களின் வாழ்க்கை தடைத்தாண்டும் ஓட்டத்தை போல, பல தடைகளை தாண்ட வேண்டும்.

இதில், உங்களால் தவிர்க்க முடியாத ஏழு விஷயங்கள் இருக்கின்றன, அவற்றை பற்றி இனி…. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…. 25 வயதை கடக்கும் போதே இதை நீங்கள் உணர்ந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

நினைப்பதல்லாம் மட்டுமல்ல, திட்டமிட்டபடியும் கூட நாம் நினைக்கும் எந்த செயல்களும் முழமையாக நடக்காது. இது வேலை, இல்லறம் என இரண்டுக்கும் பொருந்தும். இதை அறிந்து தான் அன்றே “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..” என பாடல் இயற்றி சென்றார்களோ என்னவோ!

தனிமையிலே இனிமை காண முடியுமா… சத்தியமாக முடியாது, அதிலும் இந்த 20-30க்குள் நிச்சயமாக தனிமையில் இனிமை காண முடியாது. ஆனால், உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் திருமணம் நடக்க ஆரம்பிக்கும்.

சொந்தங்களிலும் சகோதரன், சகோதரிக்கு கல்யாணம் ஆகி தனிக் குடித்தனம் சென்றிருப்பார்கள். தனிமை மெல்ல, மெல்ல உங்களை சூழ ஆரம்பிக்கும்

அழுத்தும், மன அழுத்தம்…

வேலை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணத்தால், அழுத்தம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

முக்கியமாக ஆண்களின் வாழ்க்கையில். குழந்தை, குட்டி என ஆகியிருந்தால் இது இரட்டிப்பு மடங்காய் அதிகரிக்கும். நினைத்ததை கூட, நிதானமாக தான் செய்ய வேண்டும். அவசரப்பட்டு ஏதேனும் செய்தால் அவதிக்குள்ளாக வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆல் டேஸ் ஜாலி டேஸ்…

உங்கள் நண்பர்கள், அண்ணன், அக்கா போன்றவர்கள் திருமணம் ஆகி, தங்கள் கஷ்டத்தை சொல்லி புலம்பும் போது, நீங்கள் அய்யா ஜாலி, தப்பிச்சோம்டா என்று எண்ணும் தருணங்களும் வரும்.

ஹப்பாடா என நீங்கள் பெர்மூச்சு விட்டு, வாய்விட்டு சிரிக்கும் ஒரே எப்பிசோட் இதுதான்.

கல்யாண தேனிலா…

அண்ணன், அக்கா திருமண வாழ்க்கையில் புலம்புவதை கண்டு ஒருசில நொடிகள் சிரித்தாலும்.

நமக்கு இன்னும் பொண்ணு கிடைக்கலையே.. என்ற வருத்தம் நாட்கள், மாதங்கள் நீடிக்கும். இதே போக்கில் முப்பதை கடந்துவிட்டால் அவ்வளவு தான், “பைய்யனுக்கு தான் ஏதோ குறை போல..” என பாட்டிகள் தம்பட்டம் அடிக்காமல் கூறி கொ.ப.செ-வாக செயல்படுவார்கள்

நாட்கள் செல்ல செல்ல…

நாட்கள் செல்வதே தெரியாது. உங்கள் பிறந்தநாளை கூட நீங்கள் மறக்கும் தருணங்களும் வரும். ஒவ்வொரு ஞாயிறு மட்டுமே உங்கள் நினைவில் இருக்கும். மற்ற நாட்கள் மின்னல் போல கடந்து செல்லும்.

“என்னடா வாழ்க்கை..” என்று பார்ப்பவரிடம் எல்லாம் புலம்ப ஆரம்பிப்பீர்கள். ஆனால், போக போக இது உங்களுக்கே பழகிவிடும்! இதற்கு மாற்று வழியோ, மருத்துவமோ எல்லாம் கிடையாது!

நிலையற்ற உறவுகள்…

நிலையற்ற உறவுகள் பலவற்றை கடந்து செல்லும் தருணமும் இந்த முப்பதுகளின் ஆரம்பம் தான். வேலை, தொழில், வாழ்க்கை என பல ரூபத்தில் பலர் உங்கள் வாழ்க்கையில் பார்ட் டைம் கெஸ்ட்டாக வாழ்ந்து செல்வார்கள். இதையும் உங்களால் தடுக்க முடியாது.

இவற்றை, உங்கள் விதியாலும் தடுக்க முடியாது, மதியாலும் தடுக்க முடியாது. அனைவரும், இந்த ஏழு நிலைகளை வாழ்க்கையில் கடந்து வந்து தான் ஆக வேண்டும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் அரசியல் படுகொலை…!!
Next post ஏன் தினமும் இரவில் படுக்கும் முன் பாத மசாஜ் செய்வது நல்லது என சொல்கிறார்கள் தெரியுமா?