ஓசூரில் கொள்ளையர்கள் கத்திக்குத்தில் படுகாயம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை…!!

Read Time:1 Minute, 54 Second

201606201204255152_Hosur-police-SI-treatment-in-coimbatore-hospital_SECVPFகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 15-ந் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது ஓசூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோரை கொள்ளையர்கள் கத்தியால் குத்தினர். இதில் ஏட்டு முனுசாமி பரிதாபமாக இறந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதில் ஏட்டு தனபாலுக்கு வலது மற்றும் இடது கைகளில் 20 தையல்கள் போடப்பட்டது. அவர் குணமடைந்து வருவதால் வீடு திரும்பினார்.

ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜூக்கு வயிறு பகுதியில் கத்திக் குத்து விழுந்துள்ளது. மேலும் மார்பு உள்ளிட்ட இடங்களிலும் கத்தியால் கிழிக்கப்பட்டதில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூர் கஸ்பாவில் காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி தற்கொலை…!!
Next post தனது குட்டியை காப்பாற்றும் ரங்கூன் கூட்டத்தின் மனதை நெகழ வைக்கும் காட்சி…!! வீடியோ