சாமந்தி எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா?…!!

Read Time:3 Minute, 56 Second

1-22-1466594747சாமந்தி எண்ணெய் சாமந்தி இதழ்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது. அழகிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த எண்ணெயை காலண்டுலா எண்ணெய் என்றும் கூறுவார்கள். லத்தின் வார்த்தையான காலெண்டர் என்ற வார்த்தையிலிருந்து இந்த பூக்களுக்கு பெயர் உருவானது. வருடத்தின் முதல் வருடத்தில் பூப்பதால் காலெண்டுலா எனவும் பெயர் பெற்றது.

எகிப்து நாட்டில் சாமந்தி எண்ணெயை புத்துணர்ச்சிக்காகவும், நரம்புகளை பலப்படுத்தவும் பயன்படுத்தினர். சாமந்தி எண்ணெயில் என்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதில் முக்கியமான குணம், வீக்கத்தை கட்டுப்படுத்தும்.

தசையில் ஏற்பட்டுள்ள சுளுக்கு, காயங்கள் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தோல் வியாதி நரம்பு பிரச்சனைகளுக்கு : சரும வியாதிகளான, சோரியாஸிஸ், டெர்மடைடிஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

முக்கியமாக நரம்பு பிரச்சனைகளுக்கு அருமருந்தாகவே இதனை உபயோகப்படுத்துகின்றனர். காலில் உண்டாகும் வெரிகோஸிஸ், சிலந்தி போல் உண்டாகும் நரம்பு நோய் ஆகியவற்றினை குணப்படுத்த சாமந்தி எண்ணெய் பயன்படுத்தலாம்.

காயங்களை எளிதில் ஆற்றும் குணத்தை கொண்டுள்ளது. பூச்சி கடிகளுக்கு, படுக்கையிலேயே கழிப்பவர்களுக்கு உண்டாகும் படுக்கை புண்களை குணப்படுத்தும்.

தொற்றுக்களை அகற்ற : தோலில் ஏற்படும் தொற்றுக்களால் உண்டாகும் பிரச்சனைகளான, படர் தாமரை, அரிப்பு ஆகியவைகளுக்கு சாமந்தி எண்ணெயை உபயோகப்படுத்தலாம். தழும்புகள் மறைய : சருமத்தில் உண்டாகும் தழும்புகளை மறைய வைக்கும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். ஆகவே தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

ஈரப்பதம் தரும் :

சருமத்தில் ஈரப்பதம் தருகிறது. வறண்ட, பிளவுபட்ட சருமத்திற்கும், குழந்தைகளுக்கு போடும் டயாபரால் உண்டாகும் சரும அலர்ஜிக்கும் ஏற்றது.

இதற்கு பக்கவிளைவுகளும் உண்டு. கர்ப்பிணிகளும், தாய்ப்பால் தருபவர்களும் சாமந்தி எண்ணெயை உபயோகப்படுத்தக் கூடாது. இது பக்க விளைவினை தர்ம் என ஆயுர்வேதம் கூறுகிறது.

சாமந்தி எண்ணெய் தயாரிக்கும் முறை :

சாமந்தி எண்ணெயை நாமே தயாரிக்கலாம். எப்படி என பார்க்கலாம் ஒரு பாட்டிலில் காய்ந்த சாமந்தி பூக்களை போடுங்கள். அதனுள் ஆலிவ் எண்ணெயை ஊற்றவும். பாட்டிலில் நுனி வரை எண்ணெய் இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இதனை இறுக்கமாக மூடி லேசான வெப்பம் இருக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள்.

தினமும் எடுத்து குலுக்கவும். 6 வாரங்கள் கழித்து, எண்ணெயை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் சாமந்தி எண்ணெய் தயாரிக்கும் முறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரும்பாலான ஆண்கள் எங்கு உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா?…!!
Next post இந்த ஆயுர்வேத டூத் பேஸ்ட் சொத்தை பல், ஈறு நோய்கள் மற்றும் மஞ்சள் பற்களைப் போக்கும் என்பது தெரியுமா?..!!