ஸ்டியரிங் லாக் ஆனதால் பள்ளத்தில் கவிழ்ந்தது ஜீப்: மத்திய பிரதேசத்தில் 6 பேர் பலி…!!

Read Time:1 Minute, 32 Second

201606241919308057_Six-killed-12-injured-as-jeep-falls-in-to-gorge_TMBVPFமத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் உள்ளது மகோத் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இன்று பிச்சியா பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு ஜீப்பில் சென்றுகொண்டிருந்தனர். மலைப்பகுதியில் நேவ்சா கிராமம் அருகே சென்றபோது ஜீப் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் ஜீப் டிரைவர் சந்தோஷ், பயணிகள் ராம் பியாரி, சமாரோ பாய், முகேஷ், ரத்தன் சிங் மற்றும் தர்பாரி ஆகிய 6 பேர் பலியாகினர். காயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீப்பின் ஸ்டியரிங் லாக் ஆனதால் திருப்ப முடியாமல் போனதாகவும், அதன் காரணமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜாபர்கான்பேட்டை நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது…!!
Next post காளஹஸ்தி அருகே இளம்பெண்ணை அடித்து கொன்று செயின் பறிப்பு…!!