By 26 June 2016 0 Comments

குடிபோதையில் விபரீதம்: காவலாளியை குத்திக் கொன்றவர் கைது…!!

download (1)சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நேற்றிரவு வழக்கம்போல் கடைகள் மூடிய பின்னர் ரமேஷ்(48), பழனி(36) ஆகியோர் காவல் பணியில் இருந்தனர். பின்னிரவு நேரத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து அங்கே மது அருந்தினர். பின்னர், அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. போதை ஏற, ஏற சூடேறி வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

பழனியின் கன்னத்தில் அறைந்து அவரை கீழே சாய்த்த ரமேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பழனியை சரமாரியாக குத்தினார். உடலின் பல பாகங்களில் குத்துப்பட்ட பழனி, சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விரைந்துவந்த நுங்கம்பாக்கம் போலீசார், பழனியின் பிரேதத்தை கைப்பற்றி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளி ரமேஷ்மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். சக காவலாளியை கொன்றுவிட்ட பயத்தில் வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற அவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.



Post a Comment

Protected by WP Anti Spam