3 பருமனான குழந்தைகளால் வறுமையில் வாடும் குடும்பம்… குழந்தைகளுக்காக கிட்னியை விற்கும் தந்தை…!!

Read Time:4 Minute, 21 Second

25-1466835172-baby-20kg-600குஜராத் மாநிலத்தில் 3 உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா(35), பிரக்னா பென் தம்பதி. இவர்களுக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே உடல் பருமன் அடைந்துள்ளனர்.

5, 4, 3 வயதுக் குழந்தைகள்

இதில் முக்கியமானது என்னவென்றால் 4 வயதேயாகும் அனிஷாவின் எடை 56 கிலோ. இதற்கு அடுத்ததாக யோகிதா (5) 37 கிலோ எடையும், கடைக்குட்டியான ஹர்ஷ்(3) 20 கிலோ எடையும் உள்ளனர். இவ்வாறு குறைந்த வயதிலேயே நம்பமுடியாத அளவு இவர்களின் எடை பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த குழந்தைகள் 3 பேரும் ஒருவயதுக்குள்ளாகவே 12 கிலோ எடையை எளிதாக கடந்து விட்டனராம். இந்நிலையில் பாவிகா(7) 17 கிலோ எடையுடன் நார்மல் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாதத்திற்கு ரூ.10,000 செலவு

மாதம் ஒன்றுக்கு குழந்தைகளின் உணவுத் தேவைக்காக மட்டுமே ரூ.10,000-க்கும் அதிகமாக தேவைப்படுகிறதாம். இதனால் நந்த்வனாவின் குடும்பம் வறுமையில் சிக்கிவிட்டது. இந்த குழந்தைகளுக்கு அறுவை சிசிச்சை நடத்த வேண்டும் என ஊடகங்களில் கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இதையடுத்து அந்த குழந்தைகளுக்காக கிடைத்த பணத்தை வைத்து, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

வறுமையில் குடும்பம்

இந்த சிகிச்சையின் மூலம் சில மாதங்கள் குழந்தைகளின் எடை குறைந்திருந்தது. ஆனால் மீண்டும் குழந்தைகளின் எடை தற்போது அதிகரித்துவிட்டது. குழந்தைகளின் எடையை குறைக்க மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், நந்த்வனாவின் நிலைமை குடும்ப நிலை மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது.

கிட்னி’-யை விற்க முடிவு இது குறித்து குழந்தையின் தந்தை நந்த்வனா கூறுகையில், எனது குழந்தைகளால் சிறிது நேரம் கூட பசியைத் தாங்கிக் கொள் முடியவில்லை.குண்டாகிவிட்டதால் இவர்களால் நகரக் கூட முடியவில்லை.

இதனால் எனது குழந்தைகள் மிகவும் கஷ்படப்படுகின்றனர். குழந்தைகளுக்காக சமையலறையே எங்களது வசிப்பிடமாகிவிட்டது. குழந்தையின் பசியை போக்குவதற்காக நான் எந்த சிறிய வேலை கிடைத்தாலும் செய்து வருகிறேன். இவர்கள் எடை அதிகரிக்கும் வேகத்தைப் பார்த்தால் எங்களுக்கு பயமாக இருக்கிறது. என் கண் முன்பே இவர்கள் இறந்து போவதை நான் விரும்பவில்லை.

எனவே, எனது சிறுநீரகத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் இவர்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் என்று கூறினார். மூன்று குழந்தைகளின் அதிக எடைக்கு ஒருவித நோய் (endocrinal disease or Prader-Willi syndrome) காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.. 8 வீரர்கள் மரணம்…!!
Next post மின்னல் வேகத்தில் சென்ற பாம்பைக் கண்ட பெண் செய்த காரியம்…!! வீடியோ