எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்…!!

Read Time:3 Minute, 35 Second

14-25-1466845085இப்போது உடல் இளைக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் நிறைய பேர் எலுமிச்சை சாறினை குடிக்கத் தொடங்கிவிட்டார்கள் நல்ல விஷயம்தான். எலுமிச்சையில் விட்டமின் சி மற்றும் பி அதிக அளவு உள்ளது.

இது ஜீரணத்தை அதிகப்படுத்தும். அமிலத்தன்மையை சமன் செய்யும். மேலும் எலுமிச்சை சாறினை குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என அறிய ஆசையா? தொடர்ந்து படியுங்கள் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்யும் : நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தும். குளிர்கால நோய்கள் வராமல் தடுக்கலாம். ஜலதோஷம் ஏற்படுவதை தடுக்கிறது.

வீக்கங்களை கட்டுப்படுத்தும் : உடலிலின் உள்ளுறுப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால் எற்படும் வலி வீக்கத்தை குறைக்கும் சக்தி எலுமிச்சையிடம் உள்ளது. சிறுநீரகக் கற்களை தடுக்கும் : தினமும் எலுமிச்சை சாறினை குடித்தால், சிறு நீரகத்தில் ஏற்பட்டிருக்கும் கற்கள் மெல்ல கரைந்து வெளியேறிவிடும்.

இவை சிறு நீரகத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேறச் செய்து, சிறு நீரகத்தை சுத்தப்படுத்துகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்தும்.

தசை மற்றும் எலும்புகளுக்கு பலம் : எலும்புகளுக்கு பலம் அளித்து, அவற்றி இணைப்புகளில் யூரிக் அமிலம் தங்கிவிடாமல் பாதுகாக்கிறது. தசைகளுக்கு பலம் தந்து உறுதி பெறச் செய்கிறது. அவற்றில் உண்டாகும் வீக்கங்களை போக்கி, புத்துணர்வை தரும்.

உடல் எடை குறைய : தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சில துளி எலுமிச்சை சாறினையும், உப்பையும் கலந்து குடித்தால், அசிடிட்டி வராமல் தடுக்கலாம். உடல் கணிசமாக குறைந்துவிடுவதை கண்கூடாக காண்பீர்கள்

அஜீரணம் : அஜீரணம் காரணமாக வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி ஏற்பட்டால், உடனே எலுமிச்சை சாறினை குடியுங்கள். இவை வயிற்றில் உருவாகியிருக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

நீர்சத்தினை இழக்காமல் சமன் செய்யும். பசியின்மை ஏற்பட : நொறுக்குத் தீனி அடிக்கடி உண்பவர்களா நீங்கள்? அப்படியெனில் தினமும் பகல் வேளையில் எலுமிச்சை சாறினை குடியுங்கள். பசியின்மையை உண்டாக்கும். வயிறு நிறைந்தது போல் தோன்றும்.

நெஞ்செரிச்சல் : மசாலா மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் எலுமிச்சை சாறு உடனடி நிவாரணம் தரும். உணவுக் குழாயில் மற்றும் வயிற்றில் அதிகப்படியான அமிலம் சுரப்பதை கட்டுப்படுத்தும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்திரவதைகளை தடுப்பதற்கு எவ்வித சட்டமும் இல்லை ; ரைட் டு லைப்…!!
Next post கிளிநொச்சியில் தனியார் பேருந்துக்கள் சேவை புறக்கணிப்பில் பயணிகள் அவதி…!!