திருகோணமலை பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை – பெற்றோர் உண்ணாவிரதம்…!!

Read Time:1 Minute, 57 Second

1250533600protest2திருகோணமலை – சேருநுவர பகுதியிலுள்ள மகாவெலி கம நவோத்ய வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர், இன்று திங்கட்கிழமை (27) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 08.30 அளவில் ஆரம்பமான இந்த உண்ணாவிரதத்தில் சுமார் 60 பேர் ஈடுபட்டுள்ளதுடன், தமக்கான தீர்வு கிடைக்கப்பெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மகாவெலி கம நவோத்ய வித்தியாலயத்தில் 443 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், 28 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 20 ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தினால் மஹிந்தோதய ஆய்வு கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதும், இன்னும் அது திறக்கப்படவில்லையெனவும், குறிப்பிட்டுள்ள அவர்கள், அதனை திறக்க வேண்டுமெனவும் பாடசாலைக்கு சுற்று மதில் அமைத்து தருமாறும் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் கந்தளாய் வலய கல்வித் திணைக்களத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, வலயக்கல்வி பணிப்பாளர், விடுமுறையில் உள்ளதாகவும் தகவல் ஏதும் வழங்க முடியாது எனவும் அங்கு கடமையாற்றிகின்ற அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூடான காருக்குள் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து காப்பாற்ற முயன்ற தந்தை; குழந்தை இறந்தநிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்…!!
Next post இத்தனை கற்களையும் ஒரே அடியில் சுக்கு நூறாக்கிய மனிதர்…!! வீடியோ