By 28 June 2016 0 Comments

வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க மனைவியுடன் இந்த 30 நாள் சேலஞ்ச் எடுத்துக்க நீங்க தயாரா?

27-1467020949-day1திருமணமான புதியதில் அனைவரும் சந்தோசமாக தான் இருப்பார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அந்த சந்தோசமும் குறைய ஆரம்பித்துவிடும். சிலர் இதை நினைத்து மிகவும் வருந்துவது உண்டு. ஏன்? எப்படி இந்த மாற்றம் என சிலர், வேலை, பணம், சேமிப்பு, குழந்தை வளர்ப்பு என தாங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டதாக நினைத்துக் கொள்வதும் உண்டு.

உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள்! அப்படி ஏதுமில்லை. அடுத்த கட்டம் சென்றால் மகிழ்ச்சி குறைந்துவிடும் என்பது பொய். நாம், முன்பு செய்து வந்த காரியங்களை இன்று செய்வதில்லை. சமையலை ருசித்து உண்டாலும், அதற்கு பாராட்டு தெரிவிப்பது இல்லை.

வெளியே அவர்களுடன் எங்கும் செல்வதில்லை. தனியாக நேரம் செலவழிப்பது இல்லை. அது மட்டும் போதுமா, இந்த 5 வேண்டாமா? தம்பதிகள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை! இந்த முப்பது நாட்கள் சேலஞ்ச்சை நீங்கள் முழுமையாக முடித்த மறுநாள் நிச்சயம் உங்கள் இல்லறத்தில் ஓர் புதிய மலர்ச்சி உண்டாகியிருக்கும் என்பது மட்டும் உண்மை.

நாள் #1

குறைந்தபட்சம் மூன்று நிமிடங்களாவது ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் நேராக பார்த்தபடி இருக்க வேண்டும். இப்படி தம்பதிகள் கண்ணோடு கண் பேசுவதால் இருவரின் இதயத் துடிப்பும் ஒரே மாதிரி இயங்க துவங்கும்.

நாள் #2

இதுவரை நீங்கள் செல்லாத சாலையில் கைகோர்த்து ஒன்றாக நடந்து செல்ல வேண்டும். இது உங்கள் இதயத்திற்கு மட்டுமல்ல, மனநிலைக்கும் உகந்தது ஆகும்

நாள் #3

இரவு உணவு உண்ண வெளியே சென்று வாருங்கள். வெளியே என்றால் வீட்டருகில் அல்ல. நீண்ட தூரம் பயணம் செய்து இரவு உணவருந்திவிட்டு வாருங்கள். இதுவொரு சிறிய பிக்னிக் போல இருக்க வேண்டும். வார இறுதியில் என்றால் மிகவும் சிறப்பு.

நாள் #4

மதிய உணவு கொடுத்து அனுப்பும் போது, லஞ்ச பாக்ஸில் ஏதேனும் குறிப்பு எழுதி அனுப்புங்கள். இது மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கும்.

நாள் #5

ஒருநாள் உங்கள் வீட்டை இருவரும் சேர்ந்து சுத்தம் செய்யுங்கள். வேலையை சரி பாதியாக பிரிக்காமல், இருவரும் ஒன்றாக சேர்ந்து செய்ய வேண்டும். அனைத்து வேலைகளிலும் இருவரின் பங்கும் இருக்கும்படி செய்யுங்கள்.

நாள் #6

அவர்களை சிரிக்க வைக்க எதையாவது முயற்சி செய்யுங்கள். கேளிக்கையாக இருக்க வேண்டுமே தவிர மனம் புண்படும்படி இருக்க கூடாது.

நாள் #7

ஒருவருக்கு ஒருவர் பரிசளிக்க வேண்டும். முன்பே பரிசு தருவதை கூறிவிடுங்கள். ஆனால், உங்கள் பரிசு அவர் எதிர்பார்க்காத வண்ணம் இருக்க வேண்டும்.

நாள் #8

ஓரு நாள் முழுக்க கைகோர்த்தே இருக்க வேண்டும். வீட்டில் அமர்ந்திருந்தாலும், வெளியே சென்றாலும், உறங்கும் போதும்.

நாள் #9

வீட்டிலேயே கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு பிடித்த இசை, உணவு என அனைத்தையும் ஏற்பாடு செய்து அசத்துங்கள்.

நாள் #10

சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஒன்றாக பார்க்க வேண்டும். இது, ஓர் ரம்மியமான உணர்வை அளிக்கும்.

நாள் #11

ஒரு நாள் இரவு முன்பே ப்ளான் செய்து, அவர்களை வெளியே கூட்டி சென்று ஆச்சரியமூட்ட வேண்டும்.

நாள் #12

வார நாட்களில் இடையே ஓர் நாள் மதிய உணவுக்கு சென்று வர வேண்டும். வேலைகளை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் நேசமான நபருடன் மதிய உணவை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நாள் #13

ஒரு நாள் ஃப்ரீயாக இருக்கும் போது பழைய புகைப்படங்களை எடுத்து பாருங்கள். இது நிறைய நினைவுகளை நினைவுப்படுத்துவது மட்டுமின்றி, மகிழ்ச்சியையும், உறவில் நெருக்கத்தையும் ஏற்படுத்தும்.

நாள் #14

உங்களுக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த விளையாட்டாக இருந்ததை உங்கள் துணையுடன் சேர்ந்து விளையாடுங்கள். சின்ன சின்ன சண்டைகளோடு, பித்தலாட்டம் செய்து.

நாள் #15

நீங்கள் வெகுநாளாக படிக்க நினைத்த புத்தகத்தை வாங்கியோ அல்லது நூலகம் சென்றோ ஒன்றாக படியுங்கள். அல்லது படித்து சொல்லுங்கள்.

நாள் #16

ஒன்றாக சேர்ந்து ஓர் படம், நாடகம் அல்லது நிகழ்ச்சிக்கு சென்று வாருங்கள்.

நாள் #17

காலையில் எழுந்ததும், இரவு தூங்கும் முன்னரும் முத்தமிட்டுக் கொள்ளுங்கள்.

நாள் #18

நடனம் ஆட தெரியுமோ தெரியாதோ, உங்களுக்கு பிடித்த பாடலுக்கு இருவரும் சேர்ந்து நடனம் ஆடுங்கள்.

நாள் #19

ஒருவருக்கு ஒருவர் பிடித்த உணவை சமைத்து பரிமாறுங்கள். ஒருவருக்கு பிடித்த உணவை மற்றொருவர் யார் உதவியும் இன்றி சமைக்க வேண்டும்.

நாள் #20

ஓர் நாள் முழுக்க, உங்கள் துணைக்கு பத்து முறை நன்றி கூற வேண்டும். முன்பு செய்த உதவிக்கு, தற்போது செய்துக் கொண்டிருக்கும் காரியங்களுக்கு, எதிர்காலம் குறித்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பத்து முறை இடையிடையே நன்றி கூற வேண்டும்.

நாள் #21

நீங்கள் இதுவரை செல்லாத இடத்திற்கு , கார் அல்லது பைக்கில் குறைந்தபட்சம் வீட்டில் இருந்து 1 மணிநேரம் பயணித்து சென்று வாருங்கள்.

நாள் #22

சிறு வயதில் இருந்து நீங்கள் விடாப்படியாக கடைபிடித்து வந்த ஓர் பண்பை உங்கள் துணைக்கும் கற்றுக் கொடுங்கள்.

நாள் #23

உதவியற்றோர் அல்லது முதியோர் இல்லத்திற்கு ஓர் நாள் சென்று வாருங்கள். வெறுமென சென்று வராமல், அவர்களுக்கு உதவியாக உடை, உணவு எதையாவது ஏற்பாடு செய்து சென்று வாருங்கள்.

நாள் #24

பெரிய விஷயம், சின்ன விஷயம் என்றில்லாமல், ஓர் நாள் முழுவதும் என்ன செய்தாலும் நன்றி கூறி பழகுங்கள்.

நாள் #25

அவருக்கு பிடித்த நண்பர் அல்லது உறவினர் வீட்டிற்கு ஓர்நாள் கூட்டி சென்று வாருங்கள்.

நாள் #26

ஒருவரை பற்றி ஒருவர் கடிதம் எழுதுங்கள். வெறுமென இல்லாமல், முழு மனதுடன், பிடித்தது, பிடிக்காதது என அந்த கடிதம் உங்கள் மனதில் இருக்கும் அனைத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். வார்த்தைகளை பார்த்து கையாள வேண்டும்.

நாள் #27

குறுக்கெழுத்து போன்ற மூளைக்கு வேலைதரும் போட்டிகளை சவால் விட்டு விளையாடுங்கள்.

நாள் #28

எந்த திட்டமும் இன்று ஒருநாள் முழுக்க செலவு செய்ய வேண்டும். வீட்டிலேயே இருக்கலாம், வெளியே செல்லலாம். ஆனால், எந்த முன் திட்டமும் இல்லாமல் செய்ய வேண்டும்.

நாள் #29

இதுவரை செய்கிறேன் என சொல்லி உங்கள் துணை செய்யாத செயலை கால அவகாசம் கொடுத்து செய்தே ஆகவேண்டும் என்று கட்டளையிடுங்கள்.

நாள் #30

இந்த முப்பது நாட்களில் உங்கள் இருவருக்குள் ஏற்பட்ட மன மாற்றங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். முன்பு இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை கூறுங்கள்.Post a Comment

Protected by WP Anti Spam