69 பயணிகளுடன் கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் கருப்பு பெட்டியை பழுது பார்க்கும் பணி முடிவடைந்தது…!!

Read Time:3 Minute, 40 Second

201606281131202776_Crashed-EgyptAir-flight-data-recorder-successfully-repaired_SECVPFபிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த மே மாதம் 19-ம்தேதி புறப்பட்டது. இந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக சில மணி நேரத்தில் தெரியவந்தது.

இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 290 கி.மீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்களும் பயணிகளின் உடல் பாகங்களும் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், எந்த உடல்களும் முழுமையாக மீட்கப்படவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டிகளும் கிடைக்காமல் இருந்தது. கடலுக்கடியில் கிடப்பதாக கூறப்படும் விமானத்தின் கருப்புப் பெட்டிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஜுன் மாதம் 23-ம் தேதிக்குள் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்காவிட்டால் அதில் உள்ள தகவல்களை மீட்க முடியாது என்று முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகளில் ஒன்றுமட்டும் கிடைத்துள்ளதாக கடந்த 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொரீஷியஸ் நாட்டுக்கு சொந்தமான மீட்பு கப்பல் குழுவினர் கண்டுபிடித்த இந்த கருப்பு பெட்டியில் உள்ள விபரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக எகிப்து விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடுவானில் அந்த விமானம் வெடித்து சிதறியதாக ஒருயூகம் உலவிவரும் நிலையில் அந்த பெட்டியில் உள்ள குரல் பதிவுகள் இந்த விபத்து தொடர்பான விசாரணையில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நீண்ட தேடுதலுக்கு பின்னர் கடலின் அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த கருப்பு பெட்டியின் பெரும்பகுதி உப்பு படிந்தும் லேசாக சேதமடைந்தும் இருந்தது. அந்த சேதத்தை சீர்படுத்தி பழுது பார்க்கும் பணிகள் பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில் நடந்து வந்தன.

இந்த பணி முடிவடைந்து விட்டதாகவும், அந்த கருப்பு பெட்டி விரைவில் கெய்ரோவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கெய்ரோவில் எகிப்து நாட்டு விமான நிலைய வல்லுனர்கள் அந்த பெட்டியில் உள்ள குரல் பதிவுகளை ஆய்வுசெய்த பின்னர்தான் அந்த விமானத்தின் பின்னணி அல்லது காரணம் என்ன? என்பது தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாடுகளில் வாழை அறுவடை செய்யப்படும் சுவாரசியக் காட்சி…!! வீடியோ
Next post இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு…!!