கணவரை சுட்டுக் கொலை செய்த மனைவி… வழக்கில் சாட்சியாக மாறிய கிளி..!! வீடியோ

Read Time:2 Minute, 38 Second

murder_husband_002.w540வாக்குவாதம் முற்றியதால் தனது கணவரை சுட்டுக் கொலை செய்த மனைவி தொடர்பாக சாட்சி சொல்ல அவர்கள் வளர்த்த கிளிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசிகனை சேர்ந்தவர் மார்டின், இவரது மனைவி கிளன்னா துராம் (48). இருவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தில் கிளன்னா துராம் தனது கணவர் மார்டினை 5 தடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். அதன் பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்ற வேளையில் துப்பாக்கி வெடிக்காததால் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இக்கொலையை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை. மேலும், இத்தம்பதியினர் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிளி ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். அதற்கு ‘பட்’ என பெயிரிட்டுள்ளனர்.

இது மிகவும் தெளிவாக பேசும் திறன் படைத்தது. மேலும் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து அதை திரும்ப தெரிவிக்கும் ஆற்றலுடையது.

தற்போது இக்கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது. அதில் இந்த கிளியை சாட்சி ஆக சேர்க்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ராபர்ட் ஸ்பிரிங்ஸ் டெட் கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிளி சாட்சி சொல்ல அனுமதித்துள்ளார். அறிவு திறன் படைத்த இக்கிளி தற்போது மார்டினின் முன்னாள் மனைவி கிறிஸ்டினா கெல்லரிடம் உள்ளது.

கொலை நடந்த அன்று இறுதியாக கிளன்னா துராமிடம் மார்டின் என்னை சுடாதே (‘don’t shoot me)என கூறிய வார்த்தையை கிளி திரும்ப திரும்ப தெரிவிக்கிறது. எனவே நீதிமன்றத்தில் இக்கிளி அளிக்கும் சாட்சியத்தின் மூலம் கிளன்னாவுக்கு தண்டனை வழங்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீப்பிடிக்க தீப்பிடிக்க தரையிறங்கிய விமானம்! மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ
Next post இப்படியெல்லாம் மீன் பிடிக்கலாமா?… பாருங்க நீங்களே அசந்துபோயிடுவீங்க..!! வீடியோ