மிதக்கும் கற்கள் ஓர் இயற்கையின் அபூர்வம்!… நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் காட்சி…!! வீடியோ

Read Time:2 Minute, 54 Second

fload_stone_002.w540ராமேஸ்வரத்தில் ராமர் பாலத்தை கட்ட பயன்பட்ட மிதக்கும் கற்கள் என்றழைக்கப்படும் நீரில் மூழ்காத பாறைகள் காண கிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் அமைந்துள்ள பாலத்தினை ராமர் பாலம் என்று அழைக்கின்றனர்.

ராமாயணம் என்ற இந்துக்களின் புகழ்பெற்ற புராணத்தில், இலங்கையைச் சேர்ந்த ராவணன் சீதையை கடத்தி சென்றதையடுத்து, ராமன் சீதையை கடல் கடந்து காப்பாற்ற மண், மிதக்கும் கற்கள் மற்றும் மரங்களை கொண்டு ஆஞ்சநேயர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்ட பாலம் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா அமைப்பு விண்வெளியில் இருந்த புகைப்படத்தில் தெளிவாக தெரியும் . இந்த பாலத்தினை இந்துக்கள் ராமர் பாலம் என்றே நம்பி வருகின்றனர். இந்த பாலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் முடிவுகளில் இது 3500 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சிலரும், பலர் இது மனிதர்களால் கட்டப்பட்டது அல்ல என்றும் கலவையான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் கிடைக்கும் சில அரிய வகை பாறைகள் தண்ணீரில் மிதக்கும் தன்மையை பெற்றுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

தீவு நகரமான ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் இந்த மிதக்கும் பாறைகள் உள்ளன.‘ அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு பாறைகளை மிதக்க விட்டிருக்கின்றனர். மேலும், ராமர் சீதையை மீட்க கட்டிய பாலத்தை கட்ட பயன்படுத்திய கற்களாக இது இருக்கலாம் என்று பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.

எனவே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த கனமான கற்களை தங்கள் கைகளால் தூக்கி பார்க்கின்றனர். பின்னர் அதனை தங்கள் கைகள் நீரில் விடும்போது அது முழுகாமல் மிதப்பதை கண்டு வியப்பில் மெய்சிலிர்த்து போகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுபான்மையினர் தொடர்பான மஹிந்தவின் புதிய பரிவு…!!
Next post இரு குழந்­தை­களின் தந்­தை­யோடு வீட்­டை விட்டு ஓடிய தங்­கையை கொலை செய்த சகோ­தரன்…!!