தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்

Read Time:3 Minute, 16 Second

e4209e69-2f2e-48ac-a2ee-13209275d780மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எமில் நகர் கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஜீவபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை நேற்று புதன் கிழமை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் றொபட் பெரேரா (வயது-17) என தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின் தாய் வெளிநாட்டிள் உள்ள நிலையில் தந்தை மற்றும் தம்பியுடன் குறித்த இளைஞன் வசித்து வந்தள்ளார்.
கடந்த 1 ஆம் திகதி தனது பிறந்த தினத்தையும் கொண்டடியுள்ளார்.குறித்த இளைஞன் எழுத்தூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது தந்தையுடன் சண்டை டிட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர்களுடன் இருந்து விட்டு அன்றைய தினம் மாலை ஜீவபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தனிமையாக தங்கியுள்ளார்.

குறித்த வீட்டுக்கு வந்த பின்பு எவருடனும் கதைக்கவில்லை.

நான்கு நாட்களாக குறித்த இளைஞனை காணத நிலையில் சந்தேகம் கொண்ட நண்பர்கள் நேற்று புதன் கிழமை காலை இறந்த இளைஞனின் தந்தையிடம் விசாரித்த போது என்னுடன் சண்டை போட்டான் கதைக்கவில்லை .

எங்காவது நண்பர்களின் வீட்டுக்கு போயிருப்பான் வருவான் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் நான்கு நாட்களாக வீடு பூட்டிய நிலையில் இருப்பதாகவும் அவ்வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாகவும் அயல் வீட்டார் நேற்று(29) காலையில் பொலிஸ்க்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன் போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த வீட்டிற்கு வந்து சோதனையிட்ட போது குறித்த வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.சடலம் மிகவும் உருக்குழைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸார் குறித்த இளைஞன் குறித்து விசாரனைகளை மேற்கொண்டனர்.குறித்த சடலத்தை மீட்ட மன்னார் பொலிஸார் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருட்டில் ஈடுபட்ட இளைஞனின் பரிதாப நிலை…!!
Next post பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை…!!