பலரும் அறியாத மனித உடலில் மறைந்திருக்கும் சில புதிரான இரகசியங்கள்…!!

Read Time:4 Minute, 10 Second

30-1467262381-1lesserknownmysteriessecretsofhumanbodyஇவ்வுலகில் இன்றளவும் முழுதாக கண்டறியப்படாத ஓர் மெக்கானிசம் இருக்கிறது எனில், அது மனித உடல் தான். ஆம், இன்றளவும் நமது தலையில் இருந்து கால் வரை கண்டறியப்படாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.

நாம் இங்கு காணவிருக்கும் பல விஷயங்கள் நிச்சயமாக நீங்கள் இதற்கு முன்பு அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த உலகில் சில இடங்களில் மட்டுமல்ல, நமது உடலிலும் கூட இன்னும் அறியப்படாத புதிரான இரகசியங்கள் இருக்க தான் செய்கிறது.

அமுக்குவான் பேய் என்று ஒன்று கூறப்படுகிறது, அது ஸ்லீப்பிங் பாரலசிஸ் ஆகும். “பயந்தே சாவாதடா..” என்று நாம் கூறுவோம். ஆம், நிஜமாகவே உங்கள் பயம் உங்களை கொல்லும்.

புதிர் இரகசியம் #1

உறக்கம்! 15 நிமிடங்கள் அசையாமல் படுத்திருந்தால் நீங்கள் தானாக உறங்கிவிடுவீர்கள்.

புதிர் இரகசியம் #2

எழுந்த பின்! நீங்கள் உறங்கி எழுந்த பின், நடக்கும் முதம் மூன்று நொடிகள் நடக்கும் செயல்கள் எதுவும் உங்களால் நினைவுகூர்ந்து பார்க்க முடியாது.

புதிர் இரகசியம் #3

அச்சம்! உங்களது பயத்தினாலே நீங்கள் இறக்க வாய்ப்பிருக்கிறது. ஆம், நீங்கள் அதிகமாக அச்சம் கொண்டால், உடலில் அட்ரினலின் அதிகமாக வெளிப்படும். அதிகளவில் அட்ரினலின் வெளிபடுதல் நச்சுத்தன்மை உடையது ஆகும்.

புதிர் இரகசியம் #4

கண்ணாடி! கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே புகழ்ந்து, பெருமையாக பேசுவதால், உங்களது மனநிலை அதிகரிக்கும், வலிமையாக மாறும்.

புதிர் இரகசியம் #5

வெட்கம்! அதிகமாக வெட்கப்படும் நபர்கள் ஸ்மார்ட்டாகவும், மிகவும் நம்பத்தக்க நபர்களாகவும் இருப்பார்கள்.

புதிர் இரகசியம் #6

அழுகை! ஒருவர் அழுகும் போது, தனது வாழ்வில் நடந்த பழைய சோகமான நிகழ்வுகளை எண்ணி, அதிகமாக அழுகிறார்கள். இதை, ஸ்கம்பக் பிரையின் என்று கூறுகிறார்கள். அதாவது, மூளையின் அசுத்தமான செயலாக இது கருதப்படுகிறது.

புதிர் இரகசியம் #7

பாரலசிஸ்! நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, உடலின் ஒருபகுதி பாரலசிஸ் நிலைக்கு செல்கிறது. இதனால், நீங்களாக உங்களை அறியாமல் உறங்கும் போது எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் செயல்கள் செய்துவிடாமல் உடல் தடுக்கிறது.

புதிர் இரகசியம் #8

சோகம்! உளவியல் ரீதியாக கூறப்படுவது என்னவெனில், நீங்கள் சோகமாக இருக்கும் போது, எப்போதுமே, உங்களை சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என எண்ண துவங்குவீர்கள்.

புதிர் இரகசியம் #9

கிச்சுகிச்சு! கிச்சுகிச்சு மூட்டுவது ஒருவரை மகிழ்சிக்கும் செயல் என நாம் அனைவரும் கருதி வருகிறோம். ஆனால, உண்மையில், கிச்சுகிச்சு மூடுவது ஒருவரை துன்புறுத்தும் செயல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதிர் இரகசியம் #10

தும்மல்! நீங்கள் தும்மும் போது ஓர் நொடி இறக்கிறீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆம், நாம் தும்மும் போது ஒரு நொடி நமது இதயம் செயல்பாட்டை இழக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என்பதை வெளிப்படுத்தும் 6 அறிகுறிகள்…!!
Next post ஒரு சில நொடிகளில் 100 பலூன்களை உடைத்து சாதனை படைத்த நாய்… செம்ம சுவாரசியக் காட்சி…!! வீடியோ