காஸ்ட்ரோவுக்கு ஆபரேஷன்- ஆட்சி அதிகாரத்தை தற்காலிகமாக தம்பியிடம் ஒப்படைத்தார்

Read Time:3 Minute, 22 Second

Castro.jpgகிïபா நாட்டின் அதிபர் காஸ்ட்ரோவுக்கு குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளதால் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்கவேண்டி இருப்பதால் அவர் ஆட்சி அதிகாரத்தை தற்காலிகமாக தன் 75 வயதுத் தம்பியிடம் ஒப்படைத்தார்.

நீண்டகாலம் ஆட்சி

கிïபாநாட்டின் அதிபராக 1959-ம்ஆண்டு முதல் இருந்து வருகிறார். நீண்டகாலம் பதவியில் இருக்கும் 3-வது தலைவரான இவர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையை அவரது உதவியாளர் அரசு டெலிவிஷனில் படித்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்அமெரிக்கநாடுகளின் அதிபர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற நான் அதற்காக அளவுக்கு அதிகமான சிரமம் எடுத்துக் கொண்டேன். அதோடு 1953-ம்ஆண்டு நடந்த புரட்சியின் ஆண்டு விழா ஒரு வாரத்துக்கு நடந்தது. இது தொடர்பானவேலைகளும் எனக்கு சுமையை ஏற்படுத்தின. அதனால் குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதற்காக நான் ஆபரேஷன் செய்து கொண்டேன். அதனால் சில வாரங்களுக்கு நான் ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதால் தற்காலிகமாக ஆட்சி அதிகாரத்தையும், கம்ïனிஸ்டு கட்சியின் முதல் செயலாளர் பதவியையும், ராணுவ தளபதி பதவியையும் ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் காஸ்ட்ரோ கூறி இருக்கிறார். அதில் அவர் கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த அறிக்கையை அவரது உதவியாளர் கார்லோஸ் வாலென்சியாகா படித்தார்.

2001-ம்ஆண்டு முதல்

2001-ம்ஆண்டு மேடையில் பேசிய போது அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். அது முதல் அவரது உடல் நிலை பிரச்சினையானது. அதற்கு 3ஆண்டுகள் கழித்து அவருக்கு கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தென்அமெரிக்க மாநாட்டில் பேசிய காஸ்ட்ரோ, என்னைக்கொல்ல 600 முறை முயற்சி நடந்தது. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் அமெரிக்காவில் வசிக்கும் கிïபா நாட்டினரும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர் என்று குறிப்பிட்டார்.

கிïபாவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து காஸ்ட்ரோ விலகி விட்ட செய்தி அறிந்து அமெரிக்காவில் மியாமியில் குடியேறி உள்ள கிïபா நாட்டினர் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தெருக்களில் கூடி அவர்கள் ஆடிப்பாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இஸ்ரேல் ராணுவம் முன்னேறாதபடி தடுத்து விரட்டி அடித்துவிட்டோம் – ஹிஸ்புல்லா
Next post பாகிஸ்தானில் மழைக்கு 24 பேர் பலி