படகு கவிழ்ந்ததால் குடும்பஸ்தர் பலி..!!
சிலாபத்திலுள்ள கழிமுகத்தில் மீன்பிடிக்காகச் சென்ற மீனவர் ஒருவர் படகுகவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய மீனவர் எனவும், மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மீன்பிடிக்க சென்ற இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றவர் உயிராபத்து எதுவும் இன்றி தப்பிக் கொண்டதாக பொலிஸார் கூறினார்.
குறித்த பகுதியில் பயணித்த பல மீனவர்கள் இவ்வாறு படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.