தொலைக்காட்சி நிருபர் மீது தகாத வார்த்தை பிரயோகித்த பெண்…!!
அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரை, பெண்மணி ஒருவர் இனவேறுபாட்டை குறிக்கும் வகையில் திட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க கருப்பின பெண்ணான Emmy Victor என்பவர், அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வருகிறார்.
சம்பவம் நடைபெற்ற அன்று, இவர் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்க முற்பட்டபோது, திடீரென வெள்ளையின பெண்மணி ஒருவர்,” இங்கிருந்து நீ வெளியேறு “என்று கூறி இனவாதத்தை குறிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
ஆனால், இதனை கேட்டு சற்றும் கோபப்படாத நிருபர், பொறுமையாக மேடம் வேண்டாம் இப்படி செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார், ஆனால் அப்பெண்மணியோ தனது உச்சட்ட கோபத்தால், அவரை அடிப்பது போன்று சென்று இனவாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
ஆனால் இந்த வீடியோவை வெளியிட்ட செய்தி நிறுவனம், அப்பெண்மணி பயன்படுத்திய இனவாத வார்த்தைகளை நீக்கம் செய்து வெளியிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெள்ளையின பெண்மணி, சக நிருபர் ஒருவரால் அவ்விடத்திலிருந்து அழைத்துசெல்லப்பட்டார்.
இதுதொடர்பாக பொலிசாரிடம் புகார் தெரிவித்ததையடுத்து, கடந்த வாரம் Disbrowe (28) என்ற நபர், துப்பாக்கியை காட்டி பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்தபோது, பொலிசார் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
அந்த நபரின் தாய் தான் இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், ஒரு நிருபராக இருந்துகொண்டு, எவ்வித கோபமும் அல்லாமல் இக்கட்டான சூழ்நிலையை சிறப்பாக கையாண்ட நிருபர் Emmy Victor – க்கு அவரது நண்பர்கள் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளனர்.