பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த பெற்றோர் கைது…!!
மதுகம மீகாதென்ன பாடசாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்த 10 மாணவர்களின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெற்றோர்களின் பிள்ளைகளான மாணவர்களை பாடசாலையின் முதலாம் தரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றுக்கோரியே பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும அண்மையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.